கடந்த 2016ம் ஆண்டு சென்னையை புரட்டி போட்ட செய்தி என்றால் அது வானில் பறந்த விமானம் மாயமான செய்தி தான். அதாவது சென்னையில் இருந்து அந்தமானுக்கு கிட்டத்தட்ட 29 பேர் ஏஎன் 32 என்ற விமானத்தில் பயணித்து சென்றனர். பொதுவாக ஒரு விமானம் கிளம்பிய நொடியில் இருந்து விமான நிலையத்துடன் தொடர்பில் இருந்து கொண்டே இருப்பார்கள் என்பது நம் எல்லோருக்கும் தெரிந்த ஒன்றே.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
அப்படி தொடர்பில் இருந்து வந்த ஏஎன் 32 விமானம் வங்காள விரிகுடா கடலை தாண்டும் போது மாயமான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எனவே அந்த விமானத்தில் பயணித்த 29 பேரும் உயிரிழந்துவிட்டனர் என்று அப்போதே அரசு அறிவித்திருந்தது. இந்த விமானத்தை தேடும் பணியில் ராணுவம் இறங்கியது. கிட்டத்தட்ட 7 ஆண்டுகளுக்கு பிறகு அந்த விமானம் குறித்து ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
பொங்கல் ரேஸில் அயலானை ஓடவிட்ட தனுஷ்.., “கேப்டன் மில்லர்” முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? தயாரிப்பாளர் செய்த காரியம்!!
அதாவது மாயமான அந்த விமானத்தின் உதிரிகளை தற்போது சென்னை கடலில் இருந்து கிட்டத்தட்ட 310 கி.மீ. தொலைவில், 3.40 கி.மீ. ஆழத்தில் விமானத்தின் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆனால் விமானம் எப்படி கடலுக்குள் சென்றது, அதில் சென்றவர்கள் என்ன ஆனார்கள் என தற்போது வரை கண்டுபிடிக்கப்படவில்லை.