மாநில கட்சி அந்தஸ்தை தொட்ட "நாம் தமிழர் கட்சி" … தேர்தல் ஆணையம் அறிவிப்பு.. நாதக கட்சியினர் கொண்டாட்டம்!!மாநில கட்சி அந்தஸ்தை தொட்ட "நாம் தமிழர் கட்சி" … தேர்தல் ஆணையம் அறிவிப்பு.. நாதக கட்சியினர் கொண்டாட்டம்!!

மாநில கட்சி அந்தஸ்தை தொட்ட “நாம் தமிழர் கட்சி”: நாட்டில் நடந்து முடிந்த 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் முடிவுகள் நேற்று வெளியானது. இதில் தேசிய அளவில் பாஜக கூட்டணி 292 தொகுதிகளிலும், காங்கிரஸ் கூட்டணி 232 தொகுதியிலும் மற்றவை 17 தொகுதியிலும் முன்னிலை வகித்து வருகிறது. இதனால் மூன்றாவது முறையாக மோடி பிரதமராக அரியணை ஏறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் தமிழகத்தில் பாஜக கட்சியால் தலை தூக்க முடியவில்லை என்று தான் சொல்ல வேண்டும். ஏனென்றால் தமிழகத்தில் திமுக கூட்டணி தான் 40 தொகுதிகளிலும் வெற்றி வாகை சூடியுள்ளது.

Naam Tamilar Katchi – நாம் தமிழர் கட்சி – NTK Party

இந்நிலையில் இந்த 18வது லோக்சபா தேர்தலில் எந்த கட்சியுடன் கூட்டணி வைக்காமல் தணித்து 40 தொகுதிகளிலும் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி கிட்டத்தட்ட 8.9% வாக்குகளை பெற்றுள்ளது. அதாவது, தமிழ்நாட்டில் 5 தொகுதிகளில் 3-வது இடத்திற்கு முன்னேறி  8.9% வாக்குகளை பெற்று அங்கீகாரம் பெற்ற அரசியல் கட்சியாக  நாம் தமிழர் கட்சி மாறி உள்ளது. இதனால் தேர்தல் ஆணையம் இந்த கட்சியை மாநில கட்சியாக அறிவித்துள்ளது. வெற்றி கிடைக்காவிட்டாலும் இந்த அறிவிப்பு நாதக கட்சியினருக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. கடந்த 2019ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி 3% சதவீதம் வாக்குகளை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. 18th lok sabha election 2024 results – india election 2024 – parliamentary  election 2024 – tamilnadu election news – dmk – bjp – ntk -admk

தமிழ்நாடு மக்களவைத் தேர்தல் வெற்றியாளர் பட்டியல் 2024: கோட்டை யாருக்கு சொந்தம்? முழு விவரம் உள்ளே!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *