
நடிகரும் பிரபல அரசியல்வாதியுமான சீமான் அவர்களின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்ட நாம் தமிழர் கட்சி தற்போது வரை கூட்டணி வைக்காமல் தனித்துவமாக போட்டியிட்டு வருகிறது. விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் நடக்க இருக்கும் நிலையில், அதற்காக கட்சி வேகமாக செயல்பட்டு வருகிறது. இதற்கிடையில் சமீபத்தில் கட்சி உறுப்பினர்கள் மீது என்ஐஏ சோதனை நடைபெற்றது. இது ஒரு பக்கம் இருக்க, இன்னொரு பக்கம் கட்சியில் இருந்து ஒவ்வொருவராக விலகி செல்கின்றனர். இந்நிலையில் நாம் தமிழர் கட்சியில் இருந்து முக்கிய புள்ளி வெளியேறியுள்ளார். அதாவது சீமானின் நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜா அம்மையப்பன் விலகியுள்ளார்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!

இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, கடந்த 8 வருடங்களாக உங்களுடன் பயணித்த நான் இன்றுடன் கட்சியிலிருந்து வெளியேறுகிறேன். இந்த கட்சியில் 2 தடவை சட்டமன்ற வேட்பாளர், ஒருமுறை சேலம் நாடாளுமன்ற வேட்பாளர் ஆக என்னை நிறுத்தி அழகு பார்த்த என் தம்பிகள், தங்கைகளை விட்டு கனத்த இதயத்துடன் பிரிகிறேன் என்று கூறி தொடர்ந்து பேசியுள்ளார். தற்போது அவர் வெளியிட்ட அறிக்கை சோசியல் மீடியாவில் பேசும் பொருளாக மாறியுள்ளது.