நெருங்கும் மக்களவைத் தேர்தல்:  திடீரென மாறிய சீமான் சின்னம் - தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்த நா.த.கட்சியினர்!!நெருங்கும் மக்களவைத் தேர்தல்:  திடீரென மாறிய சீமான் சின்னம் - தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்த நா.த.கட்சியினர்!!

தமிழகத்தில் இன்னும் சில நாட்களில் மக்களவை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், தேர்தல் ஆணையத்தில் சின்னம் தொடர்பாக நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

நாடு முழுவதும் மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற இருக்கிறது. அதன்படி முதற்கட்டமாக வரும் 19ம் தேதி தமிழகம் மற்றும் புதுவை பகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அதற்கான பணிகளில் தேர்தல் ஆணையம் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இது ஒரு பக்கம் இருக்க, தேர்தல் அறிவிப்பு வெளியானதில் இருந்து நாம் தமிழர் கட்சிக்கு தொடர்ந்து சிக்கலாக தான் இருந்து வருகிறது. கடந்த முறை இருந்து கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டி போட்ட நாம் தமிழர் கட்சிக்கு இம்முறை மைக் சின்னத்தை ஒதுக்கியுள்ளது. கர்நாடக மாநிலத்தை சேர்ந்த கட்சிக்கு  கரும்பு விவசாயி சின்னத்தை ஒதுக்கியது தேர்தல் ஆணையம். இதை எதிர்த்து சீமான் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த போதிலும் எந்த பயனும் இல்லை.

எனவே மக்கள் சின்னத்தை பார்த்து ஓட்டு போட வேண்டாம், உண்மை தன்மையை அறிந்து சிந்தித்து ஓட்டு போடுங்கள் என்று சீமான் தீவிர பிரச்சாரத்தில் பரப்புரை ஆற்றி வருகிறார். இந்நிலையில் தேர்தல் ஆணையத்தில் சின்னம் தொடர்பாக நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் புகார் ஒன்றை அளித்துள்ளது. அதாவது தேர்தல் ஆணையம் வாக்குப்பதிவு இயந்திரங்களில் ஒட்டியுள்ள மைக் சின்னம் வேறு மாதிரி இருப்பதாக நாம் தமிழர் கட்சியினர் குற்றம்சாட்டியுள்ளனர். தெளிவாக சொல்ல போனால், தேர்தல் ஆணையம் நாம் தமிழர் கட்சிக்கு சுவிட்ச் இல்லாத மைக் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் வாக்குப்பதிவு இயந்திரங்களில் சுவிட்ச் உள்ள சின்னம் ஒட்டப்படுகிறது என புகார் அளித்துள்ளனர்.   

அனல் பறக்கும் அரசியல் களம் – முக்கிய அறிக்கையை வெளியிட்ட  தவெக கட்சி தலைவர் விஜய்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *