நாம் தமிழர் கட்சி சின்னம்
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னுடைய கட்சியின் சின்னம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இது குறித்து விசாரித்த நீதிமன்றம் தேர்தல் ஆணையத்திற்கு, கர்நாடகாவை சேர்ந்த பாரதிய மக்கள் ஐக்கிய கட்சிக்கும் வருகிற ஏப்ரல் 1ம் தேதி பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையில் சின்னம் தர வேண்டும் என்றால் எங்களுடன் கூட்டணிக்கு வருமாறு பாரதிய மக்கள் ஐக்கிய கட்சி அழைத்திருந்தது. இதற்கு உடன்பாடில்லை என சீமான் தெரிவித்த நிலையில், அவருக்கு சின்னம் கிடைக்குமா? என கேள்விகள் எழுப்பப்பட்டு வருகிறது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
இந்நிலையில் தமிழக தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதை செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார். பொதுவாக சீமான் மேடையில் மைக்கில் ஆவேசமாக பேசுவது போல் அவருக்கு மைக் அறிவித்துள்ளது. இந்நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய சீமான், எந்த சின்னம் ஒதுக்கினாலும் தான் நிச்சயமாக ஜெயித்து காட்டுவேன் என உறுதிபட தெரிவித்திருந்தார்.