Home » செய்திகள் » நான் முதல்வன் திட்டம் ரீல்ஸ் போட்டி 2024 – மாணவர்களுக்கு செம்ம வாய்ப்பு!

நான் முதல்வன் திட்டம் ரீல்ஸ் போட்டி 2024 – மாணவர்களுக்கு செம்ம வாய்ப்பு!

நான் முதல்வன் திட்டம் ரீல்ஸ் போட்டி 2024 - மாணவர்களுக்கு செம்ம வாய்ப்பு!

நான் முதல்வன் திட்டம் ரீல்ஸ் போட்டி 2024: தமிழகத்தில் படிக்கும் மாணவ மாணவியர்களுக்கு அரசு தொடர்ந்து பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில்  தமிழக கல்வித் துறையால் கடந்த 2022ம் ஆண்டு கொண்டு வந்த திட்டம் தான்  ”நான் முதல்வன்” திட்டம். இந்த திட்டத்தின் வாயிலாக ஒவ்வொரு மாணவர்களின் எதிர்காலத்தை சிறப்பாக மற்றும் விதமாக  வழிகாட்டுதல்களும், பயிற்சிகளும் வழங்கப்படுகின்றன.

இதனை தொடர்ந்து இன்றைய டிஜிட்டல் உலகத்தில் மாணவர்கள் அனைவரும் சோசியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருந்து வருகின்றனர். குறிப்பாக ரீல்ஸ் செய்ய அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர். அவர்களுக்காக தற்போது தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது தமிழக அரசு  ரீல்ஸ் போட்டி ஒன்றை நடத்த இருக்கிறது.

இந்த போட்டியில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பயிலும் மாணவர்கள் கலந்து கொள்ளலாம். மேலும் ”நான் முதல்வன்” திட்டம் தொடர்பாக, 30 முதல் 60 செகண்ட் உள்ளிட்ட வீடியோவை தான் பதிவேற்றம் செய்ய வேண்டும். தற்போதைய ட்ரெண்டிற்கு ஏற்ப வீடியோ இருந்தால் நல்லது. எதையும் காப்பி அடிக்காமல் எடுத்திருக்க வேண்டும். மேலும் அந்த வீடியோவை [email protected] என்ற  இ-மெயில் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

அதனுடன் சேர்த்து மாணவர் பெயர், வயது, கல்லூரி பெயர், டிகிரி, நகரம், தொலைபேசி எண், ரீலின் பெயர், கேமரா உள்ளிட்ட விவரங்களையும் பதிவிட வேண்டும்.

சிறந்த முதல் 10 மாணவர்களின் படைப்புகள் நான் முதல்வன் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.

வீடியோவை அனுப்ப கடைசி நாள் டிசம்பர் 1, 2024. இரவு 11.59 மணிக்குள் அனுப்ப வேண்டும் என்று தெரிவித்துள்ளது. 

இதையும் கொஞ்சம் படிங்க பாஸ்

திருச்செந்தூர் யானை மிதித்து 2 பேர் பலி! 

TNEB வெளியிட்ட நாளை மின்தடை (20.11.2024) பகுதிகள் 

டிசம்பர் 3ம் தேதி பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரிப்பு

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top