Breaking News: மாணவர்களுக்கு 25 ஆயிரம் ஊக்கத்தொகை: தமிழகத்தில் படிக்கும் மாணவர்களுக்கு தொடர்ந்து பல்வேறு திட்டங்களை அரசு அமல்படுத்தி வருகிறது. அந்த வகையில் யு.பி.எஸ்.சி முதன்மை தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவது தொடர்பாக தமிழக அரசு ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, ” நான் முதல்வன் திட்டத்தின் கீழ் போட்டித் தேர்வானது அமைச்சர் உதயநிதி ஸ்டாலினால் கடந்த ஆண்டு தொடங்கி வைத்தார். இதன் மூலம் மத்திய அரசு வேலைவாய்ப்புக்கான போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் இளைஞர்களுக்கு பல்வேறு பயிற்சி திட்டங்களை மேற்கொண்டு வருகிறது.
மாணவர்களுக்கு 25 ஆயிரம் ஊக்கத்தொகை
அதுமட்டுமின்றி வருடந்தோறும் ஆயிரம் சிவில் சர்வீசஸ் துறையில் பயின்று வரும் மாணவர்களை மதிப்பீட்டுத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு வருகிறார்கள். அதன்படி, மாணவர்கள் முதல்நிலைத் தேர்வுக்கு தயாராவதற்கு அவர்களுக்கு 10 மாதங்களுக்கு மாதம் ரூ.7,500 வழங்கப்படும்.
அதுமட்டுமின்றி முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு 25.000 ரூபாய் ஊக்கத் தொகையாக வழங்கப்படும் என்றும் அதற்கு 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
Also Read: சென்னை ஏர்போர்ட்டில் விமான சேவைகள் பாதிப்பு – கையால் எழுதப்பட்ட போர்டிங் பாஸ்?
எனவே இந்த ஊக்கத் தொகையை பெற யு.பி.எஸ்.சி முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் https://portal.naanmudhalvan.tn.gov.in/upsc registration என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இன்று முதல் ஜூலை 28ம் தேதி வரை விண்ணப்பிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் வீடு இடிந்து தாய் 2 குழந்தைகள் பலி
வாகனத்தில் ‘பாஸ்டேக்’ ஒட்டலனா இரு மடங்கு கட்டணம்
பெங்களூர் ஜிடி வணிக வளாகத்திற்கு சீல்
கோவையில் பிளஸ் 2 மாணவன் கார் ஓட்டி விபத்து