Home » சினிமா » இந்த கியூட் குழந்தை யாருன்னு தெரியுமா? 90ஸ் கனவு கன்னியாக ஜொலித்தவர்!

இந்த கியூட் குழந்தை யாருன்னு தெரியுமா? 90ஸ் கனவு கன்னியாக ஜொலித்தவர்!

இந்த கியூட் குழந்தை யாருன்னு தெரியுமா? 90ஸ் கனவு கன்னியாக ஜொலித்தவர்!

நடிகை நதியாவின் குழந்தை பருவ புகைப்படம்: கடந்த சில மாதங்களாக பிரபல நடிகர், நடிகைகளின் குழந்தைப் பருவ புகைப்படங்கள் அவ்வப்போது சோசியல் மீடியாவில் வெளியாகி அனைவரது மத்தியில் வியப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் இப்போது பிரபல நடிகையின் குழந்தை பருவ புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதை பார்த்த ரசிகர்கள் யாரு இந்த நடிகை என்று குழப்பத்தில் இருந்து வருகின்றனர்.

அது வேற யாரும் இல்லை நடிகை நதியா தான்.  கடந்த 1985-ம் ஆண்டு வெளியான பூவே பூச்சூடவா என்ற படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்தவர் தான் நதியா. இதையடுத்து சின்ன தம்பி பெரிய தம்பி, ராஜாதி ராஜா உள்ளிட்ட படங்களில் நடித்து 80 மற்றும் 90’களில் முன்னணி நடிகையாக வளம் வந்தார்.

நடிகை நதியாவின் குழந்தை பருவ புகைப்படம்

ரஜினிகாந்த், விஜயகாந்த் உட்பட பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். கவர்ச்சி ஏதும் காட்டாமல் உழைப்பை மட்டும் வைத்து வாழ்க்கையில் முன்னேறி சென்றுள்ளார். மேலும் இவர் தமிழ் சினிமாவை தாண்டி தெலுங்கு, மலையாள உள்ளிட்ட மொழிகளில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நடிகையாக வலம் வந்தவர்.

விஜய் பேச்சை வீட்டில் இருந்து கேட்டு ரசித்த முதல்வர் – கூட்டணி சேருமா?   ஆதரவு தருவாரா?

1988 ஆம் ஆண்டு திருமணம் தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து சினிமாவில் இருந்து விலகினார். அதன்பிறகு 10 வருடங்களுக்கு பிறகு  ‘எம் குமரன்’ படத்தில் ரீ என்ட்ரி கொடுத்தார். கடைசியாக தோனி தயாரிப்பில் ‘எம் ஜி எம்’ படத்தில் இவர் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top