
பாஜக பிரச்சாரத்தில் வெடித்த வெடியால் இரண்டு குடிசை வீடுகள் எரிந்து கருகி போன சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தீ பற்றி கருகிய 2 குடிசை வீடுகள் – பாஜகவினர் மீது வழக்குப்பதிவு
நாடு முழுவதும் மக்களவை தேர்தலை நோக்கி எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். ஏழு கட்டங்களாக நடைபெற இருக்கும் இந்த தேர்தல் முதலில் வரும் ஏப்ரல் 19ம் தேதி தமிழகம் மற்றும் புதுவை பகுதியில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. ஏற்கனவே மக்களின் வாக்குகளை சேகரிக்க அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் இருந்து வருகிறார். அந்த வகையில் பாஜக வேட்பாளர் ரமேஷ் நாகை மாவட்டத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு இருந்தார். அப்போது அவரை வரவேற்பதற்கு தேசிய நெடுஞ்சாலை பகுதியில் பாஜகவினரால் பட்டாசு வெடித்து வரவேற்றனர். அப்போது எதிர்பாராத விதமாக சில பட்டாசு பொறிகள் அருகாமையில் இருந்த குடிசை வீடுகளில் பட்டு இரண்டு வீடுகள் பற்றி எரிந்து நாசமானது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
இதை அறிந்து அந்தப் பகுதியில் இருந்த மக்கள், குடிசை வீட்டை இழந்தவர்களுக்கு ஆதரவாக பாஜக நிர்வாகிகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதுமட்டுமின்றி அப்பகுதியில் உள்ள பாஜக மாவட்டத் தலைவர் கார்த்திகேயனை வீட்டை முற்றுகையிட்டு குடிசை வீடுகளை இழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று சரமாரியாக கேள்வி எழுப்பினர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. மேலும் இது குறித்து காவல்துறைக்கு புகார் அளிக்கப்பட்ட நிலையில் பாஜகவினர் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதுமட்டுமின்றி தடை செய்யப்பட்ட வெடி பொருட்களை விற்பனை செய்த, வெடி கடைக்கும் வருவாய் துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.