நாளை மின்தடை பகுதிகள் ( 03.11.2023 ). தமிழகத்தில் அனைத்து துணை மின்நிலையங்களிலும் மாதத்தில் ஒரு நாள் மின்தடை செய்யப்பட்டு மாதாந்திர பராமரிப்பு பணியானது நடைபெறும். அதன் படி நாளை மின்தடை செய்யப்படும் இடங்கள் குறித்த தகவலை அறியலாம் வாங்க.
நாளை மின்தடை பகுதிகள் ( 03.11.2023 ) ! இன்வெட்டர் வோர்க் ஆகுதானு செக் பண்ணிக்கோங்க !
கிருஷ்ணகிரி – ஆனந்தூர் துணை மின்நிலையம் :
ஆனந்தூர் , பனிக்கோட்டை , ஆயக்கோட்டை , அந்தக்குடி , சாத்தனூர் போன்ற பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படும்.
திருவள்ளூர் – அத்திப்பட்டு துணை மின்நிலையம் :
அத்திப்பட்டு , புதுநகர் , சேப்பாக்கம் , மவுத்மேடு , கே.ஆர்.பாளையம் , காட்டுப்பள்ளி , தொழில்துறை , தமிழ் குரஞ்சியூர் , நந்தியம்பாக்கம் போன்ற பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் தடையானது அறிவிக்கப்பட்டு உள்ளது.
கோயம்புத்தூர் – கல்லிமடை துணை மின்நிலையம் :
காமராஜ் சாலை , பாலன் நகர் , பாரதி நகர் , சர்க்கரை செட்டியார் நகர் , சக்தி நகர் , NGR நகர் , ஜோதி நகர் , ஹோப் கல்லூரி முதல் சிவில் ஏரோ , ராமானுஜ நகர் , வரதராஜபுரம் , N.K.பாளையம் போன்ற பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரையில் மின் விநியோகம் தடை செய்யப்பட்டு இருக்கும்.
அடுக்கு மாடி குடியிருப்புகளின் மின் கட்டணம் குறைப்பு ! தமிழக அரசு அறிவிப்பு !
பொள்ளாச்சி – மின்நகர் துணை மின்நிலையம் :
பொள்ளாச்சி மாவட்டம் மின்நகர் துணை மின்நிலையம் சார்ந்த பகுதிகளில் மின்நகர் , வல்லம் போன்ற பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
தஞ்சாவூர் – ஈச்சன்கோட்டை துணை மின்நிலையம் :
தஞ்சாவூர் மாவட்ட ஈச்சன்கோட்டை துணை மின்நிலையம் சார்ந்த ஈச்சன்கோட்டை , துறையூர் பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை மின் தடை செய்யப்பட்டு இருக்கும்.
தமிழகத்தில் நாளை பொள்ளாச்சி , தஞ்சாவூர் , கோயம்புத்தூர் , திருவள்ளூர் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஒரு சில துணை மின்நிலையணைகளில் மட்டும் மின்தடையானது அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாடு மின்சார வாரியத்தின் சார்பில் அறிவிப்புகள் வந்திருந்தாலும் இவைகளில் சில நேரங்களில் மட்டும் மாற்றங்கள் ஏற்படலாம்.