உங்க ஏரியால நாளை மின்தடை இருக்கா (09 oct 2023). கோயம்புத்தூர் , ஈரோடு , கரூர் போன்ற மாவட்டங்களில் இருக்கும் துணை மின்நிலையங்களில் நாளை மின்தடை அறிவிக்கப்பட்டு உள்ளது. அன்று மின்வாரிய பணியாளர்கள் மாதாந்திர பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள உள்ளனர்.
உங்க ஏரியால நாளை மின்தடை இருக்கா(09.10.2023) ! செக் செய்து கொள்ளுங்கள் !
ஈரோடு – பாசூர் துணை மின்நிலையம் :
ஈரோடு மாவட்டம் பாசூர் துணை மின்நிலையம் சார்ந்த பாசூர் , பூசாரிப்பாளையம் , இடையர்பாளையம் , செல்லனுர் , அய்யமாபுதூர் , ஒட்டர்பாளையம் , ஜீவாநகர் , அன்னுர் , மேட்டுப்பாளையம் , மேட்டுக்காட்டுப்புதூர் , அம்மா செட்டிபுதூர் , புதுப்பாளையம் , பூலுவபாளையம் போன்ற பகுதியில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணியினை மின்சார வாரியத்தின் பணியாளர்கள் செய்ய இருக்கின்றனர். நாளை மின்தடை எனவே காலை 9 மணியில் இருந்து மாலை 4 மணி வரையில் மின்சாரம் இயங்காது.
கோயம்புத்தூர் – மெட்ரோ துணை மின் நிலையம் :
எம்.ஜி.சாலை , எஸ்.ஐ.எச்.எஸ்.காலனி , காவேரி நகர் மற்றும் ஜே.ஜே.நகர் போன்ற கோயம்புத்தூர் மாவட்ட மெட்ரோ துணை மின் நிலையம் சார்ந்த பகுதிகளில் நாளை மாதாந்திர பரபரப்பு பணியினை மேற்கொள்ள மின்சார வாரியம் சார்ந்த பணியாளர்கள் மேற்கொள்ள உள்ளனர். எனவே காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரையில் மின்சாரம் தடை செய்யப்பட்டு இருக்கும்.
கானுர் புதூர் துணை மின் நிலையம் – கோயம்புத்தூர் :
கோயம்புத்தூர் மாவட்ட கானுர் புதூர் துணை மின் நிலையம் சார்ந்த பகுதிகளான கானுர் புதூர் , செட்டிப்புதூர் , முறியாண்டம் , பாளையம் , தொட்டிப்பாளையம் , ராமநாதபுரம் போன்ற பகுதிகளில் நாளை மின்தடை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை செய்யப்படும்.
விருதுநகர் மாவட்டத்தில் நாளை மின்தடை ! (09.10.23) WFH நண்பர்கள் இன்னைக்கே சார்ஜ் போட்டுக்கோங்க
கரூர் – காவல்காரன் பட்டி துணை மின் நிலையம் :
பொம்மநாயக்கன் பட்டி , ராஜன் காலனி , காவல்காரன் பட்டி , கீழவெளியூர் , கல்லடை , மேலவெளியூர் , ஆர்.டி.மலை , குளுத்தேரி , எடியப்பட்டி , பில்லூர் , சின்னப்பனையூர் , பாரதிப்பட்டிபொம்மநாயக்கன் பட்டி , ராஜன் காலனி போன்ற கரூர் மாவட்ட காவல்காரன் பட்டி துணை மின் நிலையம் சார்ந்த பகுதிகளில் நாளை மின்சார வாரிய பணியாளர்கள் மாதாந்திர பராமரிப்பு பணியினை செய்ய உள்ளனர். எனவே காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையில் நாளை மின்தடை செய்யப்பட்டு பணி நிறைவடைந்த உடன் மின்சாரம் வழங்கப்படும்.
இவ்வாறான மின்தடை பற்றிய தகவலை மின்சார வாரியம் தெரிவித்து உள்ளது. இவைகளில் மாற்றங்கள் ஏற்பட்டாலும் ஏற்படலாம்.