இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரின் தந்தைக்கு 7 ஆண்டு சிறை கொடுத்து நீதிமன்றம் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
நமன் ஓஜா:
indian cricket team schedule 2024: இந்தியா கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் தான் நமன் ஓஜா. இவர் இந்திய அணிக்காக சில போட்டிகளில் விளையாடியுள்ளார். அதுமட்டுமின்றி ஐபிஎல் போட்டிகளில், ராஜஸ்தான், டெல்லி மற்றும் ஹைதராபாத் உள்ளிட்ட அணிகளுக்காக விளையாடியுள்ளார். இருந்தாலும் கிரிக்கெட் போட்டிகளில் அவரால் சாதிக்க முடியாமல் போன நிலையில், 2021 ஆம் ஆண்டு அனைத்து வகையான போட்டிகளிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அதன்பிறகு, சொந்தமாக தொழில் செய்து வருகிறார்.
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரின் தந்தைக்கு 7 ஆண்டு சிறை .., வெளியான ஷாக்கிங் தகவல்!!
இப்படி இருக்கையில், அவருடைய தந்தை குறித்து தற்போது ஷாக்கிங் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, கடந்த 2013ம் ஆண்டு மத்தியப் பிரதேச மாநிலம், பெதுல் நகரில் இருக்கும் ஜோல் கேடா கிராமத்தில் உள்ள பாங்க் ஆஃப் மகாராஷ்டிரா வங்கி கிளையில் அங்கு வேலை பார்க்கும் வங்கி அதிகாரிகளின் பாஸ்வேர்ட்டை பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி, முகவர்களின் பெயரில் போலி கணக்கு தொடங்கி சுமார் ரூ.1.25 கோடி அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதன்படி, அவர் மீது, இது தொடர்பாக 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளார்.
மக்களே எச்சரிக்கை.., ஜன.1ம் தேதி வரை கனமழை.., சென்னை வானிலை மையம் முக்கிய அறிவிப்பு!!
தொடர்ந்து காவல்துறை விசாரணை செய்து வந்த நிலையில், 11 வருடங்களுக்கு பிறகு தற்போது இந்த வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த மோசடியில் மூளையாக செயல்பட்ட அபிஷேக் ரத்னத்திற்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ. 80 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது.
அதுமட்டுமின்றி, மோசடிக்கு உடந்தையாக இருந்த வங்கி மேலாளரான நமன் ஓஜாவின் தந்தை வினய் ஓஜாவிற்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.7 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இப்படி இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கைதான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
கஜகஸ்தான் விமான விபத்தில் 42 பேர் பலி.., 30 பயணிகள் கவலைக்கிடம்!!
TVK விஜய் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம்.., தீவிரமாக செயல்படும் தவெகவினர்!!
சபரிமலையில் டிசம்பர் 26ல் மண்டல பூஜை.., பக்தர்களுக்கு கூடுதல் கட்டுப்பாடுகள்!!
கஜகஸ்தானில் விமானம் வெடித்துச் சிதறியது.., 72 பேரின் நிலை என்ன?
பாரிஸ் ஈபிள் டவரில் திடீர் தீவிபத்து… சுற்றுலா பயணிகள் செல்ல தடை!