தற்போது நமீபியாவில் நிலவும் கடும் வறட்சி காரணமாக யானைகள் உட்பட காட்டு விலங்குகளை கொல்ல நமீபியா அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த முடிவிற்கு பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்பு பதிவு செய்யப்பட்டு வருகிறது.
நமீபியாவில் நிலவும் கடும் வறட்சி
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
நமீபியா :
தென் ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான நமீபியாவில் கடந்த ஒரு நூற்றாண்டுகளில் இல்லாத அளவிற்கு தற்போது கடும் வறட்சி நிலவுகிறது. இதனால் பசி, பட்டினி அதிகரித்துள்ள நிலையில் அங்கு பசியால் வாடும் 14 லட்சம் மக்களுக்கு உணவளிக்க காட்டில் வாழும் வனவிலங்குகளை வேட்டையாடி அவற்றின் இறைச்சியை உணவாகப் பயன்படுத்த அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை தொடர்ந்து 83 யானைகள் உள்பட 723 காட்டு விலங்குகளை கொல்வதற்கு நமீபியா அரசு முடிவு செய்துள்ளது.
யானைகளை கொல்ல திட்டம் :
இந்நிலையில் தென் ஆப்பிரிக்க நாடுகளில் உலகின் மிகப்பெரிய ஆப்பிரிக்க சவன்னா யானைகள் அதிகளவில் காணப்படுகின்றன. தற்போது இவை அழிந்து வரும் பட்டியலில் உள்ளன. அந்த வகையில் கடந்த மூன்று தலைமுறைகளில் அவற்றின் எண்ணிக்கை பாதியாகக் குறைந்துள்ளது. சமீபத்தில் 2022 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி யானைகளின் எண்ணிக்கை 2,27,000-க்கும் குறையாமல் இருக்கிறது. ஆனால் தற்போது நமீபியாவில் நிலவும் கடுமையான வறட்சியால் உணவுக்காக யானைகள் கொல்லப்படும் சூழ்நிலையில் அவற்றின் எண்ணிக்கை கணிசமாக குறைய வாய்ப்புள்ளது.
தவெக கட்சியின் முதல் மாநாடு ஜனவரிக்கு மாற்றம்? ஏன் தெரியுமா? வெளியான அதிர்ச்சி தகவல்!
அதுமட்டுமல்லாமல் வரிக்குதிரைகள், மான்கள், காட்டெருமைகள் உள்ளிட்ட 723 வன விலங்குகளை வேட்டையாட நமீபியா அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது அரசின் இந்த முடிவிற்கு சுற்றுசூழல் ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.