Home » செய்திகள் » தமிழக அரசின் நம்மை காக்கும் 48 திட்டத்திற்கான காப்பீட்டுத்தொகை அதிகரிப்பு – அரசாணை வெளியீடு!

தமிழக அரசின் நம்மை காக்கும் 48 திட்டத்திற்கான காப்பீட்டுத்தொகை அதிகரிப்பு – அரசாணை வெளியீடு!

தமிழக அரசின் நம்மை காக்கும் 48 திட்டத்திற்கான காப்பீட்டுத்தொகை அதிகரிப்பு

இன்னுயிர் காப்போம் தமிழக அரசின் நம்மை காக்கும் 48 திட்டத்திற்கான காப்பீட்டுத்தொகை அதிகரிப்பு செய்து தமிழ்நாடு அரசு தற்போது அரசாணை வெளியிட்டுள்ளது.

தற்போது தமிழ்நாட்டில் சுமார் 1.37 கோடி குடும்பங்கள் தமிழக முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் பலனைப் பெற்று வருகின்றனர். மேலும் இந்த திட்டத்தில் மொத்தம் 1,090 வெவ்வேறு மருத்துவ நடைமுறைகளை உள்ளடக்கியது குறிப்பிடத்தக்கது,

மேலும் இதில் குறிப்பாக குழந்தைகளுக்கான சிகிச்சைகள், 8 தொடர்ச்சியான சிகிச்சை முறைகள் மற்றும் 52 பரிசோதனை முறைகள் போன்றவை ஆகியவை அடங்கும். அத்துடன் இத்திட்டம் சுமார் 800 அரசு மருத்துவமனைகள் மற்றும் 900 தனியார் மருத்துவமனைகளில் தற்போது செயல்பாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனை தொடர்ந்து தமிழ்நாடு அரசின் இன்னுயிர் காப்போம் – நம்மை காக்கும் 48 திட்டம் என்பது விபத்து நடந்த முதல் 48 மணி நேரத்திற்குள் விபத்துக்குள்ளானவர்களுக்கு உடனடியாக முதலுதவி அளிப்பது மற்றும் விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளின் அபாயத்தைக் குறைப்பது போன்றவையாகும்.

இந்த திட்டத்தின் முதற்கட்டமாக தனியார் மருத்துவமனைகளில் ரூ.1 லட்சம் வரை இலவச சிகிச்சை அளிக்கப்பட்டது. அந்த வகையில் இன்னுயிர் காப்போம் – நம்மை காக்கும் 48 திட்டத்தின் கீழ் சிகிச்சைக்கான கட்டண வரம்பை ரூ. 1 லட்சத்தில் இருந்து ரூ.2 லட்சமாக உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top