
நடிகர் நெப்போலியன்
தமிழ் சினிமாவில் வில்லனாக களமிறங்கி ஹீரோவாக அறியப்பட்டவர் தான் நடிகர் நெப்போலியன். அவர் தொடர்ந்து பல படங்களில் ஹிட் கொடுத்த நிலையில் கடந்த 2001ல் திமுகவில் இணைந்தது மட்டுமின்றி, பெரம்பலூர் எம்பி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதனை தொடர்ந்து 2014ம் ஆண்டு கட்சியில் இருந்து விலகிய நிலைய இவருக்கு பாஜகவில் இணைந்து மாநிலத் துணைத் தலைவராக இருந்தார். மேலும் இவருக்கு கல்யாணமாகி இரண்டு மகன்கள் உள்ளன. அவரின் மூத்த மகன் தசை சிதைவு எனும் அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட நிலையில், அவரை குணப்படுத்த அமெரிக்காவுக்கு சென்ற போது குடும்பத்துடன் செட்டிலானார்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!

மேலும் அங்கு ஐடி நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். பல ஏக்கர் கணக்கில் விவசாயமும் செய்து வருகிறார். இந்நிலையில் தனது மகனுக்காக அவர் செய்த காரியம் தற்போது சோசியல் மீடியாவில் பேசும் பொருளாக மாறியுள்ளது. அதாவது தனது மூத்த மகன் தனுஷ் இந்தியாவுக்கு செல்ல ஆசைப்பட்டுள்ளார். ஆனால் அவர் விமானத்தில் செல்ல கூடாது என்றும் மீறி சென்றால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று மருத்துவர்கள் தெரிவித்த நிலையில், எப்படியாவது மகனை இந்தியாவுக்கு அழைத்து செல்ல முயற்சி செய்துள்ளார். அதன்படி மகனை கடல் வழியாக 70 நாட்கள் பயணித்து இந்தியா அழைத்து வர முடிவெடுத்துள்ளார். அதற்காக இப்பொழுது 7 நாள் பயணமாக கப்பலில் இருந்த படியே மகனுடன் அமெரிக்காவை சுற்றி பார்த்துள்ளார்.