
நரேந்திர மோடி ஜூன் 9ஆம் தேதி மீண்டும் பிரதமராக பதவியேற்பு: நாட்டில் நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தல் முடிவுகள் நேற்று முன்தினம் வெளியானது. இந்த தேர்தலில் பாஜக கூட்டணி 292 இடங்களில் வெற்றி பெற்ற நிலையில் அதில் BJP 242 தொகுதிகளில் முன்னிலையில் இருந்தது. தமிழகத்தை பொறுத்தவரை 39 தொகுதிகளில் ஒரு தொகுதியில் கூட டெபாசிட் வாங்கவில்லை. இருப்பினும் பாஜக கூட்டணி வெற்றி பெற்றதால், 3வது முறையாக மோடி பிரதமராக இருக்கிறார்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!

இதனை தொடர்ந்து இன்று மாலை 6 மணி அளவில் பாஜக சார்பாக பொதுக்கூட்டம் நடைபெற இருக்கிறது. இதில் மோடி கலந்து கொள்ள இருக்கும் நிலையில் பிரதமர் பதவி ஏற்பு தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் பிரதமர் மோடி பதவியேற்பு குறித்து முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, சனிக்கிழமை நடக்க இருந்த பதவியேற்பு விழாவை அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை, அதாவது ஜூன் 9ஆம் தேதி மாலை 6 மணிக்கு நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்க உள்ளார் என தேசிய ஜனநாயக கூட்டணி அறிவித்துள்ளது. lok sabha election 2024 – election 2024 news – pm modi – prime minister modi – bjp party – NDA – INDIA
TNSET தேர்வு 2024: மாநில தகுதித் தேர்வு ஒத்திவைப்பு… புதிய தேர்வு தேதி என்ன?
சமீபத்திய செய்திகள் – இதையும் மறக்கமாக படிங்க
ரீ ரிலீஸாகும் தளபதியின் மாஸ்டர் பீஸ் திரைப்படம்
நர்சிங் படிப்பிற்கான நுழைவுத்தேர்வு 2024