நீட் தேர்வு முடிவுகள் குறித்த சர்ச்சை. நீட் தேர்வு முடிவுகள் சர்ச்சை குறித்து தேசிய தேர்வு முகமையானது நீட் தேர்வு வினாத்தாள் வெளியானதாக வரும் குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை என்று தெரிவித்துள்ளது.
நீட் தேர்வு முடிவுகள் குறித்த சர்ச்சை
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
நீட் தேர்வு :
இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு கடந்த மே மாதம் 5ஆம் தேதி இந்தியா முழுவதும் நடைபெற்று முடிந்த நிலையில், இதற்கான தேர்வு முடிவுகள் கடந்த ஜூன் 4 ஆம் தேதி வெளியிடப்பட்டது.
தேர்வில் குளறுபடி :
இந்த நீட் தேர்வில் பல்வேறு குளறுபடிகள் நடந்துள்ளதாக தேர்வு எழுதிய மாணவர்களும், பெற்றோர்களும் குற்றம் சாட்டி வருகின்றனர்.
அந்த வகையில் முதல் மதிப்பெண்ணை 67 மாணவர்கள் பெற்றிருப்பது மற்றும் தேர்வு மையங்களில் நடந்த முறைகேடுகள் குறித்து பெற்றோர்களும் மாணவர்களும் கவலை தெரிவித்துள்ளனர்.
நீட் வினாத்தாள் கசிவு :
இதில் குறிப்பாக அகில இந்திய ரேங்க்கில் முதல் மதிப்பெண் பெற்றவர்களில் 6 பேர் ஹரியானா மாநிலத்தில் உள்ள ஒரே தேர்வு மையத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும்,
அத்துடன் அவர்களின் வரிசை எண்கள் ஒரே மாதிரி இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து ஒரே மையத்தில் இருந்து 720க்கு 720 மதிப்பெண்கள் பெறுவது நீட் தேர்வுத் தாள் கசிந்திருப்பதைக் காட்டுகிறது என்று கூறும் சமூக ஆர்வலர்கள், மருத்துவ கவுன்சிலிங் தொடங்கும் முன்,
இது போன்ற முரண்பாடுகள் குறித்து தேசிய தேர்வு முகமை விரிவான ஆய்வு நடத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்திற்கு வரும் 21 ஆம்தேதி உள்ளூர் விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு !
தேசிய தேர்வு முகமை விளக்கம் :
இந்நிலையில் நீட் தேர்வுகளை நடத்தும் தேசிய தேர்வு முகமை இந்த குற்றச்சாட்டு குறித்து விளக்கமளித்துள்ளது. அதில் நீட் தேர்வு வினாத்தாள் வெளியானதாக வரும் குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை என்றும்,
அத்துடன் சில மாணவர்கள் ஒரே தேர்வு மையத்திலிருந்து தேர்வு எழுதினர் என்பதால் முறைகேடு நடந்திருக்க வாய்ப்பு என குற்றச்சாட்டு எழுந்தது என்றும் தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.