
Breaking News: வாகனத்தில் ‘பாஸ்டேக்’ ஒட்டலனா இரு மடங்கு கட்டணம்: தேசிய நெடுஞ்சாலை(BYPASS) வழியாக செல்லும் வாகனங்கள் சுங்கச்சாவடியில் சுங்க வரி கட்டணம் செலுத்த வேண்டும்.
இதனை தொடர்ந்து மாதங்களுக்கு முன்னர் ‘பாஸ்டேக்’ (passtag) மூலம் கட்டணத்தை செலுத்த வேண்டும் என்று சுங்கச்சாவடி நிர்வாகம் தெரிவித்து இருந்தது. இந்நிலையில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஒரு முக்கியமான அறிக்கையை வெளியிட்டுள்ளது.
வாகனத்தில் ‘பாஸ்டேக்’ ஒட்டலனா இரு மடங்கு கட்டணம்
அதில் கூறியிருப்பதாவது, தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு உட்பட பகுதியில் இருக்கும் சுங்கச்சாவடி வழியாக செல்லும் வாகனங்கள் கட்டணம் செலுத்தும் போது மட்டுமே ‘பாஸ்டேக்’ அட்டையை கண்ணாடி வழியாக காமித்து செல்கின்றனர். இதனால் ஒவ்வொரு வாகனத்திற்கு தாமதம் ஏற்படுகிறது.
அதுமட்டுமின்றி வெகு நேரமாக வாகனங்கள் நிற்கும் சூழல் ஏற்படுவதால் மற்ற பயணிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே ‘பாஸ்டேக்’ ஸ்டிக்கரை கண்ணாடி உள் பக்கம் ஓட்ட வேண்டும் என்ற விதி ஏற்கனவே இருக்கும் பட்சத்தில், தற்போது கண்டிப்பாக ‘பாஸ்டேக்’ ஸ்டிக்கரை கண்ணாடியில் ஒட்டி இருக்க வேண்டும்.
Also Read: பெங்களூர் ஜிடி வணிக வளாகத்திற்கு சீல் – கர்நாடக அரசு நடவடிக்கை !
அப்படி ஒட்டாமல் வாகனங்கள் வந்தால், இரு மடங்காக கட்டணம் வசூலிக்கப்படும் என்று தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்துள்ளது.
மேலும் ‘பாஸ்டேக்’ ஓட்ட வேண்டும் என்று சுங்கச்சாவடிக்கு முன்னர் பெரிய பலகை வைக்க வேண்டும் என்று மக்கள் கூறி வருகின்றனர்.
சமீபத்தில் காவல்துறை வாகனத்தில் எந்த ஒரு ஸ்டிக்கரும் ஒட்ட கூடாது என்று சட்டத்தை கொண்டு வந்த நிலையில்,
இந்த அறிவிப்பு வாகன ஓட்டிகளுக்கு இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை நாதக கட்சி நிர்வாகி கொலை வழக்கு – 4 பேர் அதிரடி கைது
ஆன்லைன் மூலம் மதுபானங்கள் விற்கும் திட்டம்
கிடுகிடுவென உயர்ந்த தக்காளி விலை – ஒரு கிலோ எவ்வளவு தெரியுமா?