பணியில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில் உங்களுக்கு மாதம் ரூ. 50 ஆயிரம் ஓய்வூதியம் பெற விரும்பினால் இந்த திட்டத்தின் கீழ் சேர்ந்து கொள்ளுங்கள்.
ஓய்வூதியம்:
பொதுவாக ரிடயர்மெண்ட்க்கு பிறகு ஓய்வூதியத்தை வைத்து தங்களது கடைசி காலத்தை கடக்க விரும்புகின்றனர். ஆனால், அரசாங்கத்தில் இருப்பவர்கள் மட்டுமே ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. இப்படி இருக்கையில் சாதாரண மனிதர்களும் ஓய்வூதியத்தை பெறலாம். இதற்கு ஒரு சிறந்த வழி தேசிய ஓய்வூதிய அமைப்பு (NPS).
மாதம் ரூ. 50 ஆயிரம் ஓய்வூதியம் வேண்டுமா? ரூ.15000 முதலீடு போட்டா போதும்!
தேசிய ஓய்வூதிய அமைப்பு என்பது ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தால் (PFRDA) மேற்பார்வையிடப்படும் அரசாங்கத்தால் ஒழுங்குபடுத்தப்பட்ட ஓய்வூதிய சேமிப்பு திட்டம் ஆகும். இந்த திட்டத்தின் மூலம் 40 வயதில் இருந்து முதலீடு செய்யத் தொடங்கினால், ஓய்வுக்குப் பிறகு ஒவ்வொரு மாதமும் உங்களுக்கு ரூ.50 ஆயிரம் ஓய்வூதியமாகப் பெறலாம்.
உலகின் முதல் SMS எது தெரியுமா? யாருக்கும் தெரியாத சுவாரஸ்ய தகவல்!
முதலீட்டு காலம் 25 ஆண்டுகள் (40 வயது முதல் 65 வயது வரை) ஆகும். அதன்படி மாதந்தோறும் ₹15,000 பிடிக்கப்பட்டு, மொத்த பங்களிப்பு ₹45 லட்சம் ஆக இருக்கும். வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 80C மற்றும் 80CCD கீழ் வரிச் சலுகைகள் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே 40 வயது பூர்த்தியானவர்கள் இந்த திட்டத்தின் கீழ் இணைந்து பயனடையுமாறு SK SPREAD நிறுவனம் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்