விக்னேஷ் நயன்தாரா
தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக இருந்து வரும் நடிகை நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவனை கடந்த 2022ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. அவ்வப்போது தனது குழந்தைகளுடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார். மேலும் இருவரும் தற்போது தங்களது கெரியரில் பிசியாக இருந்து வருகின்றனர்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
இந்நிலையில் விக்னேஷ் சிவனை நயன்தாரா இன்ஸ்டகிராமில் Unfollow செய்து விட்டதாக சோசியல் மீடியாவில் தொடர்ந்து செய்திகள் வெளியாகிய வண்ணம் இருக்கிறது. இதனால் அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விட்டதாகவும், விரைவில் டைவர்ஸ் வாங்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி வருகிறது. இந்நிலையில் நயன்தாரா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், ” எனக்கு இது கிடைத்தது என்று அவள் கண்களில் கண்ணீருடன் என்றென்றும் சொல்வாள்” என்கிற கேப்ஷன் இடம்பெற்றுள்ளது. இதை பார்த்த ரசிகர்கள் இது என்ன விஷயமாக இருக்கும் என்று புரியாமல் திகைத்து கொண்டிருக்கின்றனர்.