நயன்தாரா விவாகரத்து
தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராகவும், முன்னணி நடிகையாகவும் ஜொலித்து கொண்டிருப்பவர் தான் நயன்தாரா. அவர் விக்னேஷ் சிவனை கடந்த 2022ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இதனை தொடர்ந்து இரண்டு குழந்தைகளுக்கு தாயான நயன்தாரா, தொடர்ந்து தனது கெரியரில் பிஸியாக இருந்து வருகிறார். தற்போது பாலிவுட் பக்கம் சென்ற அவர் நடித்த முதல் படமான ஜவான் படத்திற்காக சிறந்த நடிகை என்று விருது வாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் அவருக்கு பாலிவுட்டில் அடுத்தடுத்த படங்கள் தேடி வருகிறது. இது ஒரு பக்கம் இன்னொரு பக்கம் அவர் சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக இருந்து வருகிறார். அதன்படி அவர் தனது பேமிலியுடன் எடுக்கும் புகைப்படங்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
இந்நிலையில் கடந்த சில நாட்களாக நயன்தாராவின் நடவடிக்கை விவகாரத்தை நோக்கி வருவதாக நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். அதாவது சில நாட்களுக்கு முன்பு விக்கி இன்ஸ்டா ஐடியை நயன்தாரா பின்தொடர்வதை தவிர்த்து கொண்டார். அதுமட்டுமின்றி நேற்று “நான் இழந்துவிட்டேன்’ என்று குறிப்பிட்டு இருந்தார். இதை வைத்து நெட்டிசன்கள் அவர்கள் விரைவில் பிரிய போகிறார்கள் என்று சோசியல் மீடியாவில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் நயன்தாரா தனது X வலைதள பக்கத்தில் போட்டோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தான் கணவர் விக்கி குழந்தைகளுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இதன் மூலம் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்று நயன் சொல்லாமல் சொல்லி காட்டுகிறார் என்று தான் தெரிகிறது. அதுமட்டுமின்றி பரவி வரும் இந்த விவகாரத்து வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் என்று தான் சொல்ல வேண்டும்.