
Iss Pyaar Ko Kya Naam Doon என்ற தொடரின் ரீமேக்கான “நீ நான் காதல்” சீரியல் நடிகைக்கு திருமணம் குறித்து புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
நீ நான் காதல்:
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியலுக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. அதிலும் குறிப்பாக கடந்த நவம்பர் 2023ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட “நீ நான் காதல்” மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. இந்த தொடர் Iss Pyaar Ko Kya Naam Doon என்ற தொடரின் ரீமேக்காக ஒளிபரப்பாகி வருகிறது. மேலும் இந்த தொடரில், நிறைய புதுமுகங்கள் தான் இந்த சீரியலில் லீடு ரோலில் நடித்து வருகின்றனர்.
“நீ நான் காதல்” சீரியல் நடிகைக்கு திருமணம் – அவரே வெளியிட்ட கியூட் புகைப்படங்கள்!
200க்கும் அதிகமான எபிசோடுகள் ஒளிபரப்பாகி விட்டாலும் இன்னும் சண்டையிலேயே இந்த கதைக்களம் சென்று கொண்டிருக்கிறது. மேலும் இந்த தொடரில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் நடிகை தனுஷிக். இலங்கையை சேர்ந்த இவர் எப்படியாவது விஜே ஆகிவிட வேண்டும் என்று பல கனவோடு சென்னைக்கு வந்தார். ஆனால் அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
தியேட்டரில் ஓடும் போதே OTT-யில் ரிலீசாகும் அமரன் – எப்போது தெரியுமா?
இருப்பினும் அவருக்கு தற்போது நீ நான் காதல் சீரியலில் நடிக்க வாய்ப்பு வந்த நிலையில், அதில் அற்புதமாக நடித்து வருகிறார். இந்நிலையில் தனுஷிக்கும் மணி என்பவருக்கும் கடந்த நவம்பர் 27ம் தேதி நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. தற்போது அவர், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை ஷேர் செய்துள்ளார். அவருக்கு அனைவரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்