
தமிழ் சினிமாவின் நடிகரும் இயக்குனருமான தனுஷின் NEEK படத்தின் திரைவிமர்சனம் குறித்து இந்த தொகுப்பில் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு தனுஷ் இயக்கத்தில் வெளியான ராயன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து தற்போது அவரது இயக்கத்தில் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படம் வெளியாகியுள்ளது. இப்படத்தில் தனுஷ் தங்கச்சி மகன் பவிஷ் நாராயண் ஹீரோவாக நடித்துள்ளார். அது போக, மேத்யூ தாமஸ், அனிகா சுரேந்திரன், பிரியா பிரகாஷ் வாரியர், வெங்கடேஷ் மேனன், ரபியா கட்டூன், ரம்யா ரங்கநாதன் என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். எனவே இப்படம் வெற்றி வாகை சூடுமா என்பது குறித்து இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம் வாங்க,
திரைவிமர்சனம்:
கதை ஆரம்பிக்கும் போதே காதல் breakup-ல் வேதனையில் இருக்கும் ஹீரோவுக்கு (பவிஷ்) அவரது கல்லூரி Friend ப்ரீத்தியுடன் (ப்ரியா பிரகாஷ் வாரியர்) கல்யாணம் நிச்சயம் செய்யப்படுகிறது. அப்போது தனது breakup பற்றி அந்த பெண்ணிடம் பிரபு சொல்ல ஆரம்பிக்கிறார். சமையலில் பட்டையை கிளப்பும் ஹீரோவாக இருக்கும் பிரபு ஒரு பார்ட்டியில் நிலாவை (அனிகா சுரேந்திரன்) பார்த்து காதல் வயப்படுகிறார்.
தனுஷின் NEEK திரைவிமர்சனம்.., இந்த வார விடுமுறையில் பார்த்து கொண்டாடுங்கள்!!

பணக்கார பெண்ணாக இருக்கும் நிலா வீட்டில் அவருடைய அப்பா (சரத்குமார்) சமையல் காரன் என்பதால் சம்மதிக்கவில்லை. இதனால் அவர்களுடைய காதல் முடிவுக்கு வந்தது. ஒரு சில மாதங்களின் பின்னர் தனது காதலி நிலாவின் திருமண அழைப்பிதழ் பிரபுவுக்கு கிடைக்கிறது. நிலாவின் திருமணத்திற்கு செல்லுமாறு பிரபுவின் வருங்கால மனைவி ப்ரீத்தி பிரபுவை கோவா அனுப்பி வைக்கிறார் அதன் பிறகு அவர்கள் வாழ்க்கையில் என்னவெல்லாம் நடக்கிறது என்பது தான் படத்தின் மீதி கதை.
கிளாப்ஸ்:
படத்தின் கதை, இசை நன்றாக வந்துள்ளது.
2k கிட்ஸ் லவ் ஸ்டோரி ஓப்பனாக காட்டியுள்ளார்.
காமெடி சூப்பர்.
நடிகர் நடிகைகள் நடிப்பு சூப்பர்.
பிரதீப்பின் டிராகன் எப்படி உள்ளது? முழு திரைவிமர்சனம் இதோ!!
பல்ப்ஸ்:
திரைக்கதை தெளிவாக அமையவில்லை.
சில காட்சிகள் தொய்வாக உள்ளது.
இருந்தாலும் இந்த வார விடுமுறையில் இந்த படத்தை பார்த்து கண்டு களிக்கலாம்.
இந்த படத்திற்கு ரேட்டிங் 5-க்கு 3 கொடுக்காலம்.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
ப்ரோமேன்ஸ் படத்தின் முழு திரை விமர்சனம்.., ஜாலியான ஃபன் ரைடு தான் போங்க!!
பாலாஜி முருகதாஸின் ஃபயர் மூவி விமர்சனம்.., அட அடுத்த மன்மதன் இவரு தான் போலயே!!
ஒத்த ஓட்டு முத்தையா திரைவிமர்சனம்.., கவுண்டமணி தேர்தலில் வெற்றி பெற்றாரா?