கடந்த சில வருடங்களாக மருத்துவ படிப்பில் சாதிக்க நினைக்கும் மாணவர்கள் கல்லூரியில் சேருவதற்கு நீட் என்ற தேர்வு மத்திய அரசு சார்பாக நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வில் தேர்ச்சி பெற முடியாமல் பல மாணவர்கள் திணறி கொண்டிருக்கின்றனர். சொல்லப்போனால் சில மாணவர்கள் தங்களது உயிர்களையும் மாய்த்து கொள்கின்றனர். இது தொடர்ந்து நடைபெற்று வருவதால் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று அரசியல் பிரமுகர்கள் முதல் மாணவர்கள் வரை கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
இதனை தொடர்ந்து நாடு முழுவதும் மருத்துவ கல்லூரிகளில் மொத்தம் 5 ஆயிரம் உயர் சிறப்பு மருத்துவ இடங்கள் உள்ளன. 1000 உயர் சிறப்பு மருத்துவ இடங்களில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் பதிவுக்கான தேதி சில நாட்களில் அறிவிக்கப்பட இருக்கிறது. இந்நிலையில் நாடு முழுவதும் காலியாக உள்ள உயர் சிறப்பு மருத்துவ இடங்களை நிரப்புவதற்காக நீட் கட் ஆப் பூஜ்ஜியம் என்று தேசிய மருத்துவ ஆணையம் தெரிவித்துள்ளது. இதற்கு முன்னர் கடந்த ஆண்டு உயர் சிறப்பு மருத்துவ படிப்புக்கான நீட் கட் ஆப் 20 சதவீதமாக குறைப்பட்டது குறிப்பிடத்தக்கது.