NEET Entrance Exam 2024. இளங்கலை மருத்துவ படிப்பில் சேருவதற்கான NEET நுழைவு தேர்வு நாடு முழுவதும் வருகிற மே 5 ம் தேதி நடத்த இருப்பதாக தேசிய தேர்வு முகமை ஆணையம் தகவல் வெளியிட்டுள்ளது. national eligibility entrance test.
நீட் தேர்வு என்பது +2 படித்த மாணவர்கள் பொது மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் படிப்பில் சேருவதற்காக இந்திய அளவில் நடத்தப்படும் ஒரு நுழைவு தேர்வு ஆகும். இந்த தேர்வானது தனியார் கல்லூரிகள் மற்றும் அரசு கல்லூரிகள் அனைத்திற்கும் பொருந்தும். இந்த தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மட்டுமே மருத்துவ கல்லூரியில் சேர முடியும்.
IIE Recruitment 2024 ! இந்திய தொழில்முனைவோர் நிறுவனத்தில் மேலாளர் பணி !
இந்த 2024 ம் ஆண்டிற்கான நீட் தேர்வை வருகிற மே 5 ம் தேதி நடத்த இருக்கின்றனர். இதற்கு மாணவர்கள் வருகிற மார்ச் 9 ம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் விண்ணப்பிக்க இருக்கும் மாணவர்கள் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி விண்ணப்பிக்க முடியும்.
NEET Entrance Exam 2024
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | CLICK HERE |
நுழைவு தேர்வுக்கு விண்ணப்பிக்க | CLICK HERE |
உலகில் மருத்துவ சேவையே மகத்தான சேவையாக பார்க்கப்படுகிறது. பல விமர்சனங்களையும், எதிர்ப்புகளையும் மீறி இந்த நீட் தேர்வானது நடத்தப்படுகிறது. 2019 ம் ஆண்டு முதல் இந்த தேர்வை தேசிய தேர்வு முகமை ஆணையம் நடத்துகிறது. மேலும் +2 ல் பயாலஜி குரூப் எடுத்து படிக்காதவர்களும் இந்த தேர்வை எழுதலாம் என்று மத்திய அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.