1600 மாணவர்களுக்கு நீட் மறுத்தேர்வு: இந்தியாவில் மருத்துவ படிப்புக்காக கல்லூரியில் சேருவதற்கு கடந்த சில ஆண்டுகளாக நீட்(NEET) என்ற நுழைவு தேர்வு நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்தியா முழுவதும் கடந்த மே மாதம் 5ம் தேதி நீட் தேர்வு நடைபெற்று முடிந்தது. இதனை தொடர்ந்து இந்த தேர்வின் முடிவுகள் கடந்த ஜூன் 4ம் தேதி மக்களவை தேர்தல் முடிவுகளுடன் சேர்ந்து வெளியானது. மேலும் இந்த தேர்வில் பெரும்பாலான இடங்களில் முறைகேடுகள் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. குறிப்பாக நீட் வினாத்தாள் முன்கூட்டியே ரிலீஸ் ஆனது என்றும் மாணவர்கள் புகார்கள் தெரிவித்தார்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
இதனை தொடர்ந்து நீட் தேர்வில் எழுந்த புகாருக்கு கல்வி அமைச்சகம் தற்போது பதிலளித்துள்ளது. அதாவது, நீட் தேர்வு தொடர்பாக மாணவர்களின் புகார்களை விசாரிக்க குழு அமைக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சகம் கருத்து தெரிவித்துள்ளது. அதன்படி 6 தேர்வு மையங்களில் தேர்வு எழுதியவர்களுக்கு மட்டும் மறு தேர்வு நடைபெற இருப்பதாக தெரிவித்துள்ளது. குறிப்பாக 1600 மாணவர்களுக்கு மட்டும் மறுதேர்வு நடக்க இருப்பதாக கூறப்படுகிறது. கருணை மதிப்பெண்களால் தான் முழு மதிப்பெண் எடுத்தவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு. அனைத்து மாணவர்களுக்கும் ஒரே மாதிரியாக கருணை மதிப்பெண்கள் வழங்கப்படவில்லை. 6 மையங்களில் நீட் தேர்வு கேள்வித்தாள் தவறாக வழங்கப்பட்டது என்று தெரிவித்துள்ளது. Neet Exam 2024
சரக்கே அடிக்காம மது வாசனை வருவதாக கனடா பெண் வேதனை – மருத்துவர் சொன்ன ஷாக் தகவல்!
சமீபத்திய செய்திகள் – இதையும் மறக்கமாக படிங்க
T20 world cup 2024: இலங்கையை வீழ்த்தியது வங்காளதேசம்
TNPSC குரூப் 4 தேர்வு நாளை நடைபெறுகிறது
அடேங்கப்பா.., மளமளவென குறைந்த தங்கம் விலை…
திமுக நாடாளுமன்ற குழு தலைவராகிறாரா கனிமொழி?