நீட் தேர்வு 2024: மே 5ல் நடந்த NEET தேர்வை ரத்து செய்ய கோரிய வழக்கு: இந்தியாவில் மருத்துவ படிப்புக்காக கல்லூரியில் சேர நினைக்கும் மாணவர்களுக்கு கடந்த சில வருடங்களாக நீட்(NEET) என்ற பெயரில் நுழைவு தேர்வு நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நடப்பாண்டில் கடந்த மாதம் 5ம் தேதி இந்தியா முழுவதும் நீட் தேர்வு நடைபெற்று முடிந்தது. மேலும் நடந்த முடிந்த இந்த தேர்வில் பெரும்பாலான இடங்களில் முறைகேடுகள் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. குறிப்பாக நீட் வினாத்தாள் முன்கூட்டியே ரிலீஸ் ஆனது என்றும் மாணவர்கள் புகார்கள் தெரிவித்தார். இந்நிலையில் இந்த நீட் தேர்வு 2024 முடிவுகள் கடந்த ஜூன் 4ம் தேதி மக்களவை தேர்தல் முடிவுகளுடன் சேர்ந்து வெளியானது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
இதில் பெரும்பாலான மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லை என்று கூறப்படுகிறது. இதற்கு இந்த ஆண்டு நடந்த முறைகேடுகள் தான் காரணம் என்று பலரும் புகார் தெரிவித்து வந்த நிலையில், மே 5ம் தேதி நடந்த நீட் தேர்வை ரத்து செய்ய கோரி மாணவர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். அதாவது நடப்பாண்டில் நடந்த நீட் தேர்வில் பல இடங்களில் வினாத்தாள் முன்கூட்டியே வெளியாகி மாணவர்கள் பிடிபட்டனர். அதுமட்டுமின்றி கருணை அடிப்படையில் மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கி தேர்வு முகமை நடந்து கொண்டதாக புகார்கள் எழுந்தன. எனவே நடந்து முடிந்த நீட் தேர்வை ரத்து செய்து புதிய தேர்வு நடத்த கோரி மாணவர்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர். NEET EXAM 2024 – NEET Entrance Exam 2024 – Neet admit card 2024
பொறியியல் படிப்பு 2024: நடப்பாண்டு மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் ஜூன் 10 வெளியீடு!!
சமீபத்திய செய்திகள் – இதையும் மறக்கமாக படிங்க
ரீ ரிலீஸாகும் தளபதியின் மாஸ்டர் பீஸ் திரைப்படம்
நர்சிங் படிப்பிற்கான நுழைவுத்தேர்வு 2024
இந்திய கால்பந்து அணி வீரர் சுனில் சேத்ரி ஓய்வு
நம்பர் பிளேட்டில் ஸ்டிக்கர் ஓட்டினால் வாகனம் பறிமுதல்