Neet Exam 2024: நீட் தேர்வில் முறைகேடு செய்ததை ஒப்புக் கொண்ட மாணவர்: கடந்த மே மாதம் நடைபெற்ற நீட் தேர்வில் பல்வேறு இடங்களில் முறைகேடுகள் செய்ததாக பல மாணவர்கள் தேர்வை ரத்து செய்ய கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து வருகிறார்கள் என்பதை நாம் அறிவோம். அதுமட்டுமின்றி சில மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் கொடுக்கப்பட்டதையும் நாம் அறிவோம். இதை எதிர்த்து மாணவர்கள் மட்டுமின்றி பல்வேறு அரசியல் கட்சியினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக பீகார் மாநிலத்தில் Neet1 வினாத்தாள் தேர்வு ஆரம்பிக்கும் முன்பே வெளியே கசிந்ததாக மாணவர்கள் முக்கிய குற்றச்சாட்டாக கூறி வருகின்றனர். ஆனால் அப்படி வினாத்தாள் கசியவில்லை என்று தேர்வு நடத்தும் தரப்பினர் கூறி வந்த நிலையில், வினாத்தாளை வாங்கிய மாணவர்கள் தற்போது ஒப்பு கொண்டுள்ள சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
நீட் தேர்வில் முறைகேடு செய்ததை ஒப்புக் கொண்ட மாணவர்
உடனுக்குடன் செய்திகளை அறிய Watsapp Group -யை பின் தொடருங்கள்!
அதாவது, பீகார் மாநிலம் சமஸ்திபூரை சேர்ந்த மாணவர் அனுராக்(22). இவர் அரசு துறையில் உதவி பொறியாளராக பணியாற்றி வரும் உறவினரிடம் நீட் தேர்வு வினாத்தாளை முறைகேடாக வாங்கியதாக ஒப்புக்கொண்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, ” மே 4ம் தேதி இரவு நேரத்தில் என்னுடைய மாமா நிதிஸ் குமார் மற்றும் அமித் ஆனந்த் என்பவர்களிடம் அழைத்து சென்றார். அவர்கள் எனக்கு நீட் வினாத்தாள் மற்றும் விடை தாள் கொடுத்தனர். அதை இரவு முழுக்க உட்கார்ந்து படித்து தேர்வை எழுதினேன் என்று அனுராக் கூறியுள்ளார். இது தற்போது சோசியல் மீடியாவில் பேசும் பொருளாக மாறியுள்ளது. Neet exam 2024 news – neet exam ban – neet exam results -neet exam seithikal
ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் சாதனை படைத்த ஸ்மிருதி மந்தனா – மிதாலி ராஜை ஓவர் டேக் செய்தாரா?
சமீபத்திய செய்திகள் – இதையும் மறக்கமாக படிங்க
மும்பையில் ஐஸ்கிரீமில் இருந்த மனித விரல் விவகாரம்
தமிழகத்தில் விதிகளை மீறி இயங்கிய 5 ஆம்னி பேருந்துகள் சிறை
மனிதர்களை வைத்து மனித கழிவுகளை சுத்தம் செய்தால் சிறை தண்டனை
பிளஸ் 2 துணைத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் இன்று மதியம் வெளியீடு
↩︎Neet Exam latest news 2024