நாளை நடக்கவிருக்கும் நீட் தேர்வு 2024 : நாடு முழுவதும் நாளை நீட் தேர்வு நடைபெற இருக்கிறது. இதற்கு பெரும்பாலான மாணவர்கள் தங்களை தயார் படுத்தி வருகின்றனர். இதனை தொடர்ந்து இந்த தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருவதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. மேலும் இந்த நடப்பாண்டு நீட் தேர்வில் தமிழகத்தில் மட்டும் கிட்டத்தட்ட ஒன்றரை லட்சம் மாணவர்கள் பங்கேற்க இருக்கிறார். அது போக நாடு முழுவதும் 24 லட்சம் மாணவர்களும் கலந்து கொள்ள இருக்கிறார்கள். எனவே நாளை மதியம் 2 மணிக்கு ஆரம்பிக்க இருக்கும் இந்த நீட் தேர்வில் மாணவர்கள் எப்படி வர வேண்டும் என்ற பல்வேறு கட்டுப்பாடுகளுடன் தான் தேர்வு ஆரம்பமாக இருக்கிறது.
நாளை நடக்கவிருக்கும் நீட் தேர்வு 2024
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
கட்டுப்பாடுகள் என்னென்ன?
- நீட் தேர்வு எழுத வரும் மாணவர்கள் முழுக்கை சட்டை அணிந்திருக்கக் கூடாது.
- மாணவிகள் தலையில் எந்தவித பூக்களும் வைத்திருக்க கூடாது.
- மாணவ மாணவியர்கள் காலணிகள் அணிய கூடாது.
- அதுமட்டுமின்றி எந்த ஒரு தங்க ஆபரணங்களும் அணிந்திருக்கக் கூடாது.
- மொபைல் போன்கள் கொண்டு வரக்கூடாது.
- எலக்ட்ரிக் சாதனங்கள் கொண்டு வரக்கூடாது.
- தண்ணீர் நன்றாக தெரியும் அளவுக்கு வாட்டர் பாட்டில் கொண்டு வர வேண்டும்.
மாயமான காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஜெயக்குமார் சடலமாக மீட்பு – கடைசியாக அவர் எழுதிய பரபரப்பு கடிதம்?
இந்த வருடம் நீட் தேர்வு எழுத வரும் மாணவ மாணவியர்களுக்கு கடும் கட்டுப்பாடுகளுடன் தான் தேர்வு எழுத அனுமதிக்கப்பட இருக்கிறார்கள். மேலும் நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை https://neet.ntaonline.in/frontend/web/admitcard/index என்ற இணையதளத்தில் டவுன்லோடு செய்து கொள்ளலாம் என்று தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது