நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடையில்லை. கடந்த மே மாதம் 5 ஆம் தேதி இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு கடுமையான கட்டுப்பாடுகளுடன் நாடு முழுவதும் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன் நீட் தேர்வின் வினாத்தாள்கள் கசிய விடப்பட்டதாக குற்றசாட்டு எழுந்தது. இதன் காரணமாக நீட் வினாத்தாள் சர்ச்சை குறித்து உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்ட நிலையில் மத்திய தேர்வு முகமைக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடையில்லை :
தற்போது நடந்து முடிந்துள்ள இந்த ஆண்டு மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவு தேர்வு முடிவுகள் வரும் ஜூன் மாதம் 14 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், நீட் தேர்விற்கான வினாத்தாள்கள் கசிய விடப்பட்டதாக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், தற்போது நீதிமன்றம் சார்பில் தேசிய தேர்வு முகாமைக்கு நோட்டீஸ் அனுப்பட்டுள்ளது.
Whatsapp மூலம் மின்கட்டணம் செலுத்தும் வசதி ! தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு !
இதனையடுத்து உச்சநீதிமன்றம் தேசிய தேர்வு முகாமைக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் வரும் ஜூன் மாதம் வெளியாக உள்ள நீட் தேர்வு முடிவுகளுக்கு எந்த தடையும் இல்லை என்றும், குறிப்பிட்ட தேதியில் தேர்வு முடிவுகளை வெளியிடலாம் என்று உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.