Neet Exam 2024: நீட் வினாத்தாள் கசிந்த விவகாரம். கடந்த சில நாட்களாக சோசியல் மீடியாவில் பேசும் பொருளாக இருந்து வரும் செய்தி என்றால் அது நீட் தேர்வு குறித்து தான். மே 5 ல் நடந்து முடிந்த அந்த தேர்வை ரத்து செய்ய கோரி தொடர்ந்து மாணவர்கள் நீதிமன்றத்தில் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். குறிப்பாக சில முக்கிய பகுதிகளில் நீட் வினாத்தாள் கசிந்ததாகவும், கருணை மதிப்பெண் தொடர்பாகவும் தான் குற்றசாட்டுகள் எழுந்தது. இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
அதாவது, நீட் வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் பாட்னாவில் 4 தேர்வர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் உட்பட 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதுமட்டுமின்றி பீகார் பொதுப் பணித்துறையில் ஆசிரியர் தேர்வுக் குழுவில் இருந்த ஒருவரும் கைதாகியுள்ளார். தற்போது அனைவரும் நீதிமன்றக் காவலில் இருந்து வருகின்றனர். மேலும் பொருளாதார குற்றப்பிரிவு தரப்பில் அவர்களிடம் விசாரணை செய்து வருகின்றனர். அதுமட்டுமின்றி அவர்களிடம் இருந்து கோப்புகள் மற்றும் மின்சாதன பொருட்கள் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில் தேர்வுக்கு முன்னதாக 35 பேருக்கு வினாத்தாள் கொடுக்கப்பட்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது. Neet Exam 2024 – Neet exam issue
செந்தில் பாலாஜி வழக்கின் தீர்ப்பு எப்போது? – சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் அறிவிப்பு!!
சமீபத்திய செய்திகள் – இதையும் மறக்கமாக படிங்க
விக்கிரவாண்டி தொகுதிக்கு ஜூலை 10ம் தேதி இடைத்தேர்தல்
T20 உலகக்கோப்பை 2024 புள்ளியல் பட்டியல் வெளியீடு.