NEET Re-Exam Result 2024 – நீட் மறுதேர்வு முடிவுகள் வெளியீடு: நடப்பாண்டு நடந்த நீட் தேர்வில்1 பல குளறுபடிகள், மோசடிகள் நடந்ததாக தேர்வு எழுதிய மாணவர்கள் தெரிவித்தனர். குறிப்பாக தேர்வு நடப்பதற்கு முன்னரே வினாத்தாள் விற்கப்பட்டதாகவும், கருணை அடிப்படையில் மாணவர்களுக்கு மார்க் கொடுத்ததாகவும் புகார்கள் எழுந்தன.
NEET Re-Exam Result 2024 – நீட் மறுதேர்வு முடிவுகள் வெளியீடு
மேலும் நீட் தேர்வை ரத்து செய்து மீண்டும் நடத்த மாணவர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதன் அடிப்படையில் கருணை மதிப்பெண் வழங்கப்பட்ட 1563 பேருக்கு மட்டும் மறுதேர்வு வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
இதனை தொடர்ந்து அவர்களுக்கு கடந்த ஜூன் 23ம் தேதி நீட் மறு தேர்வு நடத்தப்பட்டது. ஆனால் இந்த தேர்வை 1563 பேரில் வெறும் 816 பேர் மட்டுமே எழுதினார்கள். இந்நிலையில் நீட் மறு தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது.
எனவே தேர்வு எழுதிய மாணவர்கள் www.exams.nta.ac.in/NEET/ என்ற இணையதள முகவரியில் சென்று தங்களது முடிவுகளை தெரிந்து கொள்ளலாம் என்று தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. மேலும் நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்ய கோரி மாணவர்கள் முதல் பல்வேறு அரசியல் அமைப்பினரும் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர்.
நீட் தேர்வில் முறைகேடு செய்ததை ஒப்புக் கொண்ட மாணவர்
Neet-ல் கருணை மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு மறு தேர்வு
1600 மாணவர்களுக்கு நீட் மறுத்தேர்வு?
- Neet Exam news 2024 ↩︎