Neet UG 2024 Latest News Today: நீட் முறைகேடு எய்ம்ஸ் மாணவர்களிடம் விசாரணை. மருத்துவ படிப்புக்கு சேருவதற்காக மத்திய அரசால் கொண்டு வரப்பட்டது தான் நீட் தேர்வு. வருடனந்தோறும் நடைபெற்று வரும் இந்த தேர்வை எதிர்த்து பல்வேறு கட்சியினர் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த மே மாதம் 5ம் தேதி நடைபெற்ற இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகள் ஜூன் 4ம் தேதி வெளியானது.
நீட் முறைகேடு எய்ம்ஸ் மாணவர்களிடம் விசாரணை
மேலும் எந்த வட்டமும் இல்லாமல் இந்த வட்டம் பல்வேறு பகுதிகளில் மோசடி நடந்துள்ளது. குறிப்பாக ராஜஸ்தான் மாநிலத்தில் வினாத்தாள் கசிந்ததாக தகவல் வெளியாகி பேசுபொருளாக மாறியது. இதேபோல் ஜார்க்கண்ட், குஜராத்,மகாராஷ்டிரா, ராஜஸ்தான், உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களிலும் நீட் நுழைவுத் தேர்வில் முறைகேடுகள் நடைபெற்றதாக தெரிய வந்ததால் மாணவர்கள் தேர்வை ரத்து செய்யுமாறு போராடி வருகின்றனர்.
பாமாயில் துவரம் பருப்பு டெண்டர் வெளியீடு – ரேஷன் கடையில் தொடர்ந்து விநியோகம் செய்ய வாய்ப்பு
அதுமட்டுமின்றி இதுதொடர்பாக அந்தந்த மாநிலங்களில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும் இந்த வழக்கு கடந்த 23-ம் தேதி சிபிஐ-க்கு மாற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து பல்வேறு மாநிலங்களில் சிபிஐ போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சூழ்நிலையில் நீட் தேர்வு முறைகேடுகள் சம்மந்தமாக பாட்னா எய்ம்ஸ் மருத்துமனையைச் சேர்ந்த மூன்று இளநிலை மருத்துவ மாணவர்களை சிபிஐ காவலில் எடுத்து விசாரணை செய்து வருகின்றது. மேலும் அந்த மாணவர்கள் தங்கி இருந்த அறையை சிபிஐ அதிகாரிகள் சீல்வைத்தனர்.
அதுமட்டுமின்றி அவர்களுடைய லேப்டாப் மற்றும் மொபைல் போன்றவைகளை பறிமுதல் செய்தனர். இதனை தொடர்ந்து நேற்று இருவரை சிபிஐ கைதுசெய்தது. பீகாரின் பாட்னாவை சேர்ந்த பங்கஜ் குமார், ஜார்கண்டில் உள்ள ஹசாரிபாக்கை சேர்ந்த ராஜு சிங் ஆகியோர் நேற்று கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தற்போது சிபிஐ விசாரித்து வரும் 4 மாணவர்கள் நீட் வினாத்தாள் கசிவு தொடர்பான முறைகேட்டில் ஈடுபட்ட கும்பலுடன் தொடர்பில் இருந்துள்ளதாக கூறப்படுகிறது.