இளநிலை நீட் தேர்வு முடிவுகள் -  நாளை மதியம் வரை காலக்கெடு கொடுத்த உச்ச நீதிமன்றம்!!இளநிலை நீட் தேர்வு முடிவுகள் -  நாளை மதியம் வரை காலக்கெடு கொடுத்த உச்ச நீதிமன்றம்!!

Neet Exam 2024: இளநிலை நீட் தேர்வு முடிவுகள்: இளநிலை நீட் தேர்வு கடந்த மே மாதம் 5ம் தேதி நடைபெற்ற நிலையில் பல்வேறு குளறுபடிகள் நடந்ததாக மாணவர்கள் கொந்தளித்தனர். குறிப்பாக நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

மேலும் இந்த வழக்கு சிபிஐ கைக்கு மாறிய நிலையில், குற்றம் செய்த மாணவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது. இதனை தொடர்ந்து சமீபத்தில் இளநிலை நீட் தேர்வு முடிவுகளை நகரங்கள் வாரியாகவும், தேர்வு மையங்கள் வாரியாகவும் வெளியிட வேண்டும் என்று  உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதுவும் நாளைக்கு (ஜூலை 20ம் தேதி) மாலைக்குள் இணையதளத்தில் அதனை வெளியிட வேண்டும் என்று தலைமை நீதிபதி உத்தரவிட்டார். தேசிய தேர்வு முகமையின் கோரிக்கை விடுத்ததை ஏற்று சனிக்கிழமை பிற்பகல் வரை காலக்கெடு விதிக்கப்பட்டது.

Also Read: உலகில் விண்டோஸ் சேவைகளில் பாதிப்பு – பயனர்கள் அதிர்ச்சி!

அதே நேரத்தில் மாணவர் விவரங்களை வெளியிட கூடாது என்றும் அறிவுறுத்தின. மேலும் வினாத்தாள் கசிந்தது எப்படி என்று சிபிஐ தொடர்ந்து விசாரணை செய்து வருகிறது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *