Home » செய்திகள் » என் மகன் 20 தோசை சாப்பிடுவான் – நீயா நானாவில் டிரெண்டான 22 வயது இளைஞர் – ரயிலில் அடிபட்டு மரணம்!

என் மகன் 20 தோசை சாப்பிடுவான் – நீயா நானாவில் டிரெண்டான 22 வயது இளைஞர் – ரயிலில் அடிபட்டு மரணம்!

என் மகன் 20 தோசை சாப்பிடுவான் - நீயா நானாவில் டிரெண்டான 22 வயது இளைஞர் - ரயிலில் அடிபட்டு மரணம்!

விஜய் டிவி தொலைக்காட்சியில் கோபிநாத் தொகுத்து வரும் நீயா நானா ஷோவில் டிரெண்டான இளைஞர் ரயிலில் அடிபட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது விஜய் டிவியில் பேமஸ் ஷோக்களில் ஒன்றாக இருந்து வரும் நிகழ்ச்சி தான் நீயா நானா. இந்த ஷோவை கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு மேல் தொகுப்பாளர் கோபிநாத் தான் தொகுத்து வழங்கி வருகிறார். மேலும் இந்த ஷோவில் அவர் பேசும் பேச்சுக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே இருந்து வருகின்றனர். அதுமட்டுமின்றி இந்த  ஷோவின் மூலம் ஏகப்பட்ட பேர் பிரபலமாகி இருக்கிறார்கள். அப்படி நீயா நானா ஷோ சோசியல் மீடியா முழுவதும் ட்ரெண்டிங்கில் இருந்தவர் தான்  பிரணவ்(22). அவர் கலந்து கொண்ட ஷோவில் அவருடைய தாய் தன் மகன் 20 தோசை வெரைட்டி வெரைட்டியாக சாப்பிடுவான் என கூறியது இப்ப வரைக்கும் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது.

இதையடுத்து ட்ரெண்டிங்கான ஒருவரை தனியாக பேட்டி எடுப்பதை பல யூடியூப் சேனல்கள் வழக்கமாக வைத்துள்ளனர். அந்த  வகையில் ஒரு தனியார் யூடியூப் சேனலுக்கும் பிரணவ் தன் அம்மா மற்றும் தங்கையுடன் பேட்டி அளித்திருந்தார். அதில் 25 தோசை சாப்பிட்டும் காட்டி இருந்தார். இந்நிலையில், அவர் போனில் பேசிக்கொண்டே தண்டவாளத்தை கடக்க முயற்சித்த போது எதிர்பாராத விதமாக அந்த பகுதியில் வந்த எக்ஸ்பிரஸ் ரயில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மேலும் அவருடன் சேர்ந்து தண்டவாளத்தை கடக்க முயன்ற சதீஷ் என்பவரும் உயிரிழந்தார். இதுகுறித்து ரயில்வே போலீஸ் வழக்குப்பதிவு செய்து, இருவரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மக்களவை தேர்தல்: நெல்லையில் அடுத்தடுத்த சிக்கல்?.., 4 கோடி பறிமுதல்.,  14 வேட்பாளருக்கு பரபரப்பு நோட்டீஸ்!!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top