மதுரை நியோமேக்ஸ் நிதி நிறுவன மோசடி வழக்கு தொடர்பான விசாரணையை துரிதபடுத்துமாறு சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகளுக்கு ஆணை பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
நியோமேக்ஸ் நிதி நிறுவன மோசடி வழக்கு
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
நியோமேக்ஸ் நிதி நிறுவன மோசடி :
மதுரையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வந்த நியோ மேக்ஸ் என்ற நிதி நிறுவனத்திற்கு, சுமார் 20க்கும் மேற்பட்ட கிளை நிறுவனங்கள் உள்ளன. அந்த வகையில் அதிக வட்டி தருவதாகக் கூறி மக்களிடம் கோடிக்கணக்கில் மோசடி செய்யப்பட்டதாக இந்த நிறுவனத்தின் மீது குற்றசாட்டு எழுப்பப்பட்டது.
இதனை தொடர்ந்து இந்த மோசடி தொடர்பாக நெல்லை, பாளையங்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு கிளைகளை நிர்வகித்து வந்த நிர்வாகிகள் கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் உள்ளனர். அத்துடன் கைது செய்யப்பட்டவர்களில் முக்கிய சில நபர்களுக்கு மட்டும் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த மோசடி வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரியும், இதனையடுத்து சிலருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக்கோரியும் ஏராளமான வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன
அத்துடன் இந்த வழக்கு தொடர்பான அனைத்து விசாரணைகளையும் முடித்து 15 மாதங்களில் சிறப்பு நீதிமன்றத்தில் பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
உயர்நீதிமன்றம் உத்தரவு :
இதனையடுத்து ரூ.6,௦௦௦ கோடி நியோமேக்ஸ் நிதி நிறுவன மோசடி வழக்கை துரிதப்படுத்தவும், மேலும் மனுதாரர்கள் மோசடி தொடர்பான ஆவணங்களை பொருளாதார குற்றப்பிரிவு விசாரணை அதிகாரிகளிடம் வழங்கவும் உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு.
சென்னையில் மீண்டும் ஃபார்முலா 4 கார் ரேஸ் – எங்கு எப்போது தெரியுமா ?
அத்துடன் இடைத்தரகர்களை கைது செய்து சொத்துக்களை பறிமுதல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை ஆணை பிறப்பித்துள்ளது.
பள்ளிக்கு அரிவாளுடன் வந்த மாணவர் – போலீசார் விசாரணை
கள்ளக்குறிச்சியில் கார் விபத்தில் சிக்கிய நடிகர் ஜீவா
மதுரை விமான நிலையம் 24 மணி நேரமும் செயல்படும்
பிரபல பாடகர் மனோ மகன் குடிபோதையில் செய்த காரியம்?