நேபாளத்தில் ஆற்றுக்குள் பேருந்து கவிழ்ந்து விபத்து: தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலங்களில் தொடர்ந்து விபத்துகள் நடந்த வண்ணம் இருக்கிறது. அந்த வகையில் நேபாள பகுதியில் ஒரு விபத்து அரங்கேறியுள்ளது. அதாவது நேபாளத்தில் பொக்காராவில் இருந்து காத்மாண்டு என்ற பகுதிக்கு 40 இந்தியர்கள் பஸ்சில் சென்று கொண்டிருந்தனர்.
நேபாளத்தில் ஆற்றுக்குள் பேருந்து கவிழ்ந்து விபத்து
அப்போது அந்த பஸ் தனாஹூன் மாவட்டத்தில் இருக்கும் மார்ஸ்யாங்டி ஆற்றின் அருகே உள்ள சாலையில் சென்று கொண்டிருந்தது. அந்த சமயத்தில் பேருந்து சில கோளாறு காரணமாக, பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த நிலையில், பஸ் ஆற்றுக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. nepal
இந்த விபத்து குறித்து மீட்பு குழுவினர் தகவல் கிடைத்த நிலையில் உடனே சம்பவ இடத்திற்கு வந்தனர். மேலும் நீச்சல் வீரர்கள் உதவியுடன் ஆற்றில் விழுந்த 16 பேர் மீட்கப்பட்ட நிலையில் 14 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து மற்றவர்களை தேடும் பணியில் மீட்பு படையினர் இருந்து வருகின்றனர்.
Also Read: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: முக்கிய குற்றவாளியான பிரபல ரவுடி திருவேங்கடம் கைது – என்ன நடந்தது?
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முன்னதாக கூட இப்படி ஒரு சம்பவம் நடந்தது. அதாவது கடந்த ஜூலை மாதம் நேபாளத்தின் திரிசூலி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 2 பேருந்துகள் அடித்துச் செல்லப்பட்டதில் பலர் இந்தியர்கள் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. bus accident
TNPSC தேர்வர்களுக்கு குட் நியூஸ்
திருச்சி சாலையில் தீப்பற்றி எரிந்த ஆம்னி பேருந்து
கிருஷ்ணகிரி பாலியல் வழக்கில் கைதான குற்றவாளி உயிரிழப்பு