உலகின் சிறிய நாடான நேபாளத்தில் 4.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
சமீப காலமாக உலகில் பல இடங்களில் தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. ஏன் சில நாட்களுக்கு முன்பு கூட தமிழகத்தில் ஒரு பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இப்படி இருக்கையில், உலகின் சிறிய நாடான நேபாளம் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது, இமயமலையின் அடிவாரத்தில் இருக்கும் நாடு தான் நேபாளம். அங்கு இன்று அதிகாலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்திய நேரப்படி இன்று அதிகாலை 3.59 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.8 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது.
Also Read: கிரிக்கெட்டில் இருந்து விராட் கோலி ஓய்வு? .., இந்தியாவை விட்டு வெளியேறும் KING – அதிர்ச்சி தகவல்!
இதனால் அங்கு வாழும் பொதுமக்கள் தங்களை பாதுகாத்து கொள்வதற்காக பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைந்து வருகின்றனர். மேலும் இந்த நிலநடுக்கத்தால் எந்த வித சேதாரமும், உயிரிழப்பும் ஏற்படவில்லை என்று தற்போது தகவல் வெளியாகியுள்ளது . நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
Join WhatsApp Get National News Today
மேலும் இதே போல் நேபாளத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு நவம்பரில் ஏற்பட்ட நிலநடுக்கம் மிகப்பெரிய அழிவை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி கடந்த ஆண்டு நேர்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவானது. இதில், 157 பேர் உயிரிழந்தனர். குறிப்பாக ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தனர். அதோடு 8 ஆயிரம் வீடுகள் இடிந்து தரைமட்டமானது. இதனால் தான் கடும் பயத்தில் இருந்து வருகின்றனர். நேபாளத்தில் 4.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக மாவட்ட செய்திகள் (District News in Tamil)
லோகேஷ் கனகராஜின் அடுத்த படம் – LCU வில் வர வாய்ப்பு இருக்கா?
அமித்ஷாவை கண்டித்த தவெக விஜய் – அம்பேத்கருக்காக களத்தில் இறங்கிய தளபதி!
தமிழ்நாட்டில் நாளை(20.12.2024) மின்தடை பகுதிகள் விவரம் ! முழு நேர பவர் கட் செய்யப்படும் இடங்கள் !
ஈரோடு இடைத்தேர்தலில் தவெக போட்டி.., நிர்வாகிகளுக்கு அட்வைஸ் கொடுத்த விஜய்!!
சென்னை மெரினா கடற்கரையில் உணவுத் திருவிழா 2024! நாளை முதல் 5 நாட்கள் நடைபெறும்