நயன் - விக்கி திருமண வீடியோ தீபாவளி வெளியீடு? பெரிய எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!நயன் - விக்கி திருமண வீடியோ தீபாவளி வெளியீடு? பெரிய எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

நயன் – விக்கி திருமண வீடியோ தீபாவளி வெளியீடு: லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனை கிட்டத்தட்ட 9 ஆண்டுகளாக காதலித்து கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 9 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர். மகாபலிபுரத்தில் இருக்கு ஒரு ரிசார்ட் ஒன்றில் தான் இந்த திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. இந்த திருமணத்திற்கு அவர்களின்  நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

நயன் – விக்கி திருமண வீடியோ தீபாவளி வெளியீடு

உற்ற உறவினர்கள் தவிர யாருக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை. குறிப்பாக பத்திரிக்கையாளர்கள் அழைக்கப்படவில்லை. அதுபோல பிரபலங்கள் சிலர் கலந்து கொண்ட நிலையில் அவர்களுடைய செல்போன்களும் உள்ளே அனுமதிக்க படவில்லை. நயன்தாரா திருமண வீடியோ முன்னணி ஓடிடியான நெட்பிளிக்ஸில் வெளியாகும் என்று அவர் ஏற்கனவே அறிவித்திருந்தார்.

அதனை நெட்பிளிக்ஸ் ஓடிடி நிறுவனம், 25 கோடி ரூபாய் வரை கொடுத்து வீடியோவை வாங்கியுள்ளதாக தகவல்கள் பரவின. ஆனால் இது குறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வமாக அறிவிப்பும் தற்போது வரை வெளியாகவில்லை.  இந்நிலையில் நயன் – விக்கி திருமணம் முடிந்து ஒரு ஆண்டுக்கு மேலாகிவிட்ட நிலையில் தற்போது கல்யாண வீடியோ குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதாவது நெட்பிளிக்ஸ் நிறுவனம் இது தொடர்பான அறிவிப்பு ஒன்றை  வெளியிட்டுள்ளது.

மஞ்சள் வீரன் படத்தில் ஹீரோவாக காமெடி நடிகர் – TTF வாசனுக்கு ஏற்பட்ட சோதனை!

அதில் இந்த வருடத்தின்  இறுதியில் 81 நிமிடம் இருக்கும் அந்த வீடியோ வெளியாகும் என அறிவித்துள்ளது.

அந்த வீடியோவுக்கு “Nayanthara: Beyond the fairy tale” என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படி இருக்கையில் அந்த வீடியோ தீபாவளி அன்று வெளியாக போவதாக கூறப்படுகிறது.

பொறுத்து இருந்து பார்க்கலாம். இதற்கு முன்னர் ஹன்சிகா மோத்வானி கல்யாண பிரபல ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருந்தது குறிப்பிடதக்கது.  

சினிமா பிரியரா நீங்கள் அப்ப இத கிளிக் பண்ணுங்க

சீரியலை விட்டு விலகிய சிறகடிக்க ஆசை “கோமதி பிரியா” 

தவெக மாநாட்டிற்கு தொண்டர்களுக்கு விஜய் அழைப்பு

நடிகை சோனாவிற்கு நள்ளிரவில் நேர்ந்த விபரீதம்

நூலிழையில் உயிர் தப்பிய பிரியங்கா மோகன் – என்ன நடந்தது?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *