
Breaking News: 90 அடி ரயில் பாலத்தில் போட்டோ ஷூட் எடுத்த தம்பதி: தற்போதைய காலகட்டத்தில் திருமணம் செய்வதற்கு முன்னரோ அல்லது பின்னரோ போட்டோ ஷூட் எடுக்கும் முறையை வழக்கமாக வைத்துள்ளனர்.
சிலர் அதில் வரம்புக்கு மீறி நடந்து கொள்கின்றனர். அந்த வகையில் தற்போது ரயில்வே பாலத்தில் போட்டோ ஷூட் எடுத்த தம்பதிக்கு ஏற்பட்ட விபரீதம்.
90 அடி ரயில் பாலத்தில் போட்டோ ஷூட் எடுத்த தம்பதி
அதாவது, ராஜஸ்தான் மாநிலம் பாக்டி நகரில் உள்ள காலால் கி பிபாலியான் பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் ராகுல் (22) மற்றும் ஜான்வி (20) என்பவர்களுக்கு திருமணம் நடைபெற்று முடிந்தது. இதனை தொடர்ந்து அந்த தம்பதி ராஜஸ்தானில் இருக்கும் பாலியில் போட்டோஷூட் எடுக்க திட்டமிட்டிருந்தனர்.
அங்கு எடுத்து முடித்த பிறகு, அதே பகுதியில் இருந்த 90 அடி உயரத்தில் உள்ள பழமையான ரயில் மேம்பாலத்தில் போட்டோ ஷூட் எடுக்க பிளான் செய்து, தண்டவாளத்தில் நின்று போட்டோ எடுத்துக் கொண்டிருந்தனர். அந்த சமயம் பார்த்து திடீரென ரயில் வந்துள்ளது.
இதனால் அதிர்ச்சி அடைந்த ராகுல் – ஜான்வி தனது உயிரை காப்பாற்றி கொள்ள நினைத்து, அங்கிருந்து 90 அடி பள்ளத்தில் குதித்தனர்.
இதனை தொடர்ந்து மீட்பு படையினர் அந்த இரண்டு பேரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
தற்போது அவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து வரும் நிலையில், அவர்களின் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் போட்டோ ஷூட் எடுக்க விரும்புவோர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
யூரோ கோப்பை கால்பந்து தொடர் இறுதிப்போட்டி
சோமாலியாவில் குண்டு வெடிப்பால் 5 பேர் பலி
தமிழகத்தில் இனி இந்த பள்ளிகளுக்கும் காலை உணவு திட்டம்