தேர்தல் முடிவுக்கு பிறகு புதிய ரேஷன் கார்டு. தமிழகத்தில் வறுமை கோட்டிற்க்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு குறைந்த விலையில் மக்களுக்கு தேவையான உணவு தானிய பொருட்களை குறைந்த விலையில் ரேஷன் கடைகள் மூலம் வழங்கி வருகிறது. மேலும் அரசின் நலத்திட்ட உதவிகள் அனைத்தும் குடும்ப அட்டை மூலமாக மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
தேர்தல் முடிவுக்கு பிறகு புதிய ரேஷன் கார்டு :
தற்போது தமிழகத்தில் 2 லட்சம் பேர் புதிய ரேஷன் அட்டை பெற விண்ணப்பித்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் புதிய ரேஷன் அட்டை பெற விண்ணப்பித்தவர்களுக்கு நாடாளுமன்ற தேர்தல் முடிவுக்கு பிறகு குடும்ப அட்டை வழங்கப்படும் என்று உணவுப்பொருள்வழங்கல் துறை அதிகாரிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் புதிதாக 6 மருத்துவக் கல்லூரிகள் அமைக்கும் பணி – தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி !
தமிழ்நாடு அரசு சார்பில் அறிவிக்கப்பட்ட மகளிர் உரிமைத்தொகை ரூ.1000 வழங்கும் திட்டத்தால் கடந்த ஜூலை மாதம் முதல் புதிய ரேஷன் கார்டு வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக அரசின் சார்பில் அறிவிக்கப்பட்ட நலத்திட்டங்களை பெற முடியாமல் மக்கள் சிரமத்திற்குள்ளாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.