புதிய வகை கொரோனா தொற்று பரவல். கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் உலகம் முழுவதும் கொரோனா என்ற வைரஸ் தொற்று பரவியதன் காரணமாக பல்வேறு உயிரிழப்புகள் மற்றும் பொருளாதார சரிவை சந்தித்தது குறிப்பிடத்தக்கது. மேலும் பொதுமக்கள் அனைவரும் தங்கள் வீடுகளுக்குள் முடங்கியிருக்கும் நிலை ஏற்பட்டது. தற்போது இந்த நிலைமை சீராகி வரும் நிலையில் மேலும் சில இடங்களில் கொரோனா தொற்று பரவத்தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
கொரோனா தொற்று பரவல் :
தற்போது சிங்கப்பூர் நாட்டில் பரவத்தொடங்கியுள்ள கொரோனா வைரஸ் தொற்று பரவலானது இந்தியாவின் சில பகுதிகளில் பதிவாகி இருப்பதால் பொதுமக்கள் அனைவரும் கட்டாயமாக முகக்கவசம் அணிந்து கொள்ள வேண்டும் என்று தமிழக சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்காட்டில் மலர்க்கண்காட்சி இன்று முதல் தொடக்கம் – மாவட்டம் நிர்வாகம் சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது !
மேலும் தமிழ்நாட்டை பொறுத்தவரை இந்த புதிய வகை கொரோனா வைரஸ் தொற்று பரவல் குறித்து அச்சமோ, பதற்றமோ அடைய தேவையில்லை எனவும், முனேச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக்கொள்ளவது நல்லது எனவும், வயதானவர்கள், உடல்நலம் குன்றியவர்கள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் ஆகியோர் கவனமுடன் இருக்க வேண்டும் என்று தமிழ்நாடு சுகாதாரத்துறை சார்பில் கூறப்பட்டுள்ளது.