Home » செய்திகள் » 2025 புத்தாண்டில் வரப்போகும் புதிய மாற்றங்கள்.., மக்கள் கண்டிப்பாக இதை தெரிஞ்சுகோங்க!!

2025 புத்தாண்டில் வரப்போகும் புதிய மாற்றங்கள்.., மக்கள் கண்டிப்பாக இதை தெரிஞ்சுகோங்க!!

2025 புத்தாண்டில் வரப்போகும் புதிய மாற்றங்கள்.., மக்கள் கண்டிப்பாக இதை தெரிஞ்சுகோங்க!!

நாளை மறுநாள் வர இருக்கும் 2025 புத்தாண்டில் வரப்போகும் புதிய மாற்றங்கள் குறித்து முக்கியமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

இன்னும் ஒரு நாளில்  2024ம் ஆண்டு நிறைவடைய இருக்கிறது. இதனை தொடர்ந்து நம் அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த  2025 புத்தாண்டு தொடங்க இருக்கிறது. ஒவ்வொரு புத்தாண்டு பண்டிகையையும் மக்கள் பட்டாசுகளை வெடித்து, இனிப்புகள் பரிமாறியும் வெகு விமர்சையாக கொண்டாடி வருகிறார்கள். மேலும் புதிய ஆண்டு தொடங்கும் முன்பு, நடைமுறையில் இருக்கும் ஒரு சில திட்டங்களில் மாற்றம் ஏற்படுவது வழக்கமான ஒன்று தான். அந்த வகையில், 2025 புத்தாண்டில் சில மாற்றங்கள் நடைமுறைக்கு வர இருப்பதாக கூறப்படுகிறது. அப்படி என்னென்ன மாற்றங்கள் என்பது குறித்து இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம் வாங்க.

LPG கேஸ்:

ஒவ்வொரு மதமும் சிலிண்டர் விலையை மாற்றம் அடைந்து கொண்டே இருக்கிறது. அந்த வகையில், நடப்பாண்டில், வீட்டில் பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு விலையில் எந்தவித மாற்றமும் இல்லாமல் இருந்து வந்த நிலையில், வணிகத்திற்கு பயன்படுத்தப்படும் சிலிண்டர் விலை மட்டுமே  அதிகரித்து காணப்பட்டது. இப்படி இருக்கையில், அடுத்த 2025 ஆண்டில் வீட்டில் உபயோகிக்கும் சமையல் எரிவாயு விலை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

EPFO பென்ஷன் வித்ட்ராவல்:

ஊழியர்கள் ஓய்வு பெற்ற பிறகு, அவர்களின் அவசர தேவைக்காக பணியில் இருக்கும் பொழுதே PF பணம் மாதந்தோறும்  EPFO அமைப்பு  பிடித்து வந்தது. இந்நிலையில் PF பெறும்  ஊழியர்களுக்கு 2025 புத்தாண்டு பரிசாக EPFO அமைப்பானது புதிய அறிவிப்பு ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, ஜனவரி 1 முதல் நாட்டில் இருக்கும் எந்த வங்கியாக இருந்த போதிலும், அங்கு PF தொகையை பெற்றுக் கொள்ளலாம். மேலும், இதற்கு கூடுதல் செயல்முறைகள் ஏதும் இல்லை என்றும் தெரிவித்துள்ளது.

அமேசான் பிரைம் மெம்பர்ஷிப்:

அமேசான் நிறுவனத்தின் கீழ் இயங்கி வரும் அமேசான் பிரைம் வீடியோ புதிய விதிகளை அறிமுகப்படுத்த இருக்கிறது. அதாவது, 2025 ஜனவரி 1 முதல் Subscriber-கள் 5 டிவைஸ்களில் மட்டுமே லிங்க் செய்து கொள்ள முடியும். குறிப்பாகச் சொல்லப்போனால் இரண்டு TV உட்பட 2 சாதனங்களில்   மட்டுமே use செய்து கொள்ள முடியும். அதற்கு மேல் பயன்படுத்த முடியாது என்று புதிய விதிமுறையை கொண்டு வந்துள்ளது.

உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்

ஜனவரி 2025ல் பாஜகவின் புதிய தேசிய தலைவர் நியமனம்! பதவி ரேஸில் உள்ள முக்கிய புள்ளிகள்!

PSLV – C60 ராக்கெட் விண்ணில் ஏவப்படும் நேரம் மாற்றம் – இஸ்ரோ அறிவிப்பு!

அரசு பேருந்தில் POLICE இலவசமாக பயணிக்கலாம்.., வெளியான முக்கிய அறிவிப்பு!

2024ன் கடைசி நாளன்று (31.12.2024) மின்தடை செய்யப்படும் பகுதிகள்! TANGEDCO வெளியிட்ட அறிவிப்பு!

2025 இல் இத்தனை ஞாயிற்றுக்கிழமையா! அடேங்கப்பா இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top