
அமெரிக்காவின் நியூயார்க் சிட்டியில் திடீரென பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டதால் அங்கு வாழும் மக்கள் அச்சத்தில் இருந்து வருகின்றனர்.
திடீரென நியூயார்க் சிட்டியை உலுக்கிய நிலநடுக்கம்
அமெரிக்காவின் முக்கிய நகரங்களில் ஒன்றாக விளங்குவது தான் நியூயார்க் சிட்டி. இந்நிலையில் இந்த சிட்டியில் திடீரென்று ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டது. சொல்லப்போனால் ரிக்டர் அளவுகோலில் 4.8 என்ற அளவில் பதிவான நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கியது. இதனால் பதறிப்போன பொதுமக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியே வந்து சாலைகளில் தஞ்சம் புகுந்தனர். மேலும் இந்த நிலநடுக்கத்தால் அதிர்ஷ்டவசமாக பெரிய பாதிப்பும், உயிர் தேசமும் ஏற்படவில்லை என்றாலும், இந்த நிலநடுக்கம் பூமிக்கு அடியில் 116.5 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டுள்ளது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
அதுமட்டுமின்றி அமெரிக்காவில் உள்ள லெபனான் நியூஜெர்சி அருகே நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் நியூயார்க் சிட்டியில் இந்தியர்கள் அதிகமாக வாழ்ந்து வருகின்றனர். அவர்களின் உடல்நிலை குறித்து நியூயார்க்கில் உள்ள இந்திய தூதரகமும் உறுதி செய்துள்ளது. இதுகுறித்து கூறியிருப்பதாவது, திடீரென நடந்த இந்த நிலநடுக்கத்தில் இந்தியர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. அப்படி இந்தியர்கள் யாருக்காவது பாதிப்பு ஏற்பட்டு இருந்தால் தூதரகத்தை [email protected] மூலம் தொடர்பு கொள்ளலாம்’’ எனவும் தெரிவித்துள்ளது.