பொதுவாக விமான நிலையத்தில் உங்கள் அன்புக்குரியவர்கள் விடைபெற்று செல்லும் போது, கட்டிப்பிடித்து வழியனுப்பி வைக்கிறது வழக்கம். இப்படி இருக்கையில், கட்டிப்பிடிக்க காலக்கெடு வெறும் 3 நிமிடம் தான் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விதிமுறை எங்கு கொண்டு வந்துள்ளது என்று உங்களுக்கு ஒரு கேள்வி எழும்பும். அது வேற எங்கும் இல்லை.
விமான நிலையத்தில் கட்டிப்பிடிக்க 3 நிமிடம் தான் – அதுக்கு மேல பண்ணா அபராதம்!
நியூசிலாந்தில் உள்ள டுனேடின் சர்வதேச விமான நிலையத்தில் தான் இந்த விதிமுறை கொண்டு வரப்பட்டுள்ளது. பயணிகள் கூட்டத்தை பராமரிக்கவும், பாதுகாப்பு அமைப்புக்காகவும் இந்த விதி அமல்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அதன்படி இந்த விமான நிலையத்தில், கட்டிப்பிடிப்பதற்கான அதிகபட்ச நேரம் மூன்று நிமிடங்களாக அறிவிக்கப்பட்ட நிலையில், இந்த வரம்புக்கு மேல் ஒருவர் கட்டிப்பிடித்தால், விமான நிலைய ஊழியர்கள் உடனடியாக நடவடிக்கை எடுப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவையில் 47 ஆண்டுகளுக்கு பிறகு தாக்கப்போகும் புயல் – எந்த மாவட்டத்தில் தெரியுமா? முழு விவரம் இதோ!!
மேலும், இந்த விதியை யாராவது மீறினால், அவருக்கு அபராதமும் விதிக்கப்படலாம். அதுமட்டுமின்றி, கட்டிப்பிடிக்க அதிக நேரம் எடுப்பதால் அங்கு இடப்பற்றாக்குறை ஏற்படுவதால் தான் இந்த விதிமுறை கொண்டு வரப்பட்டுள்ளது. எனவே இதனை மக்கள் ஏற்று செயல்பட வேண்டும் என்று விமான நிர்வாகம் தெரிவித்துள்ளது.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்