1130 கூடுதல் பஸ்கள் இயக்கம்
பொதுவாக பண்டிகை நாட்களிலோ அல்லது திருவிழா நாட்களிலோ மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக அரசு சார்பாக கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் முகூர்த்த வாரமான இன்று, நாளை சனிக்கிழமை(மார்ச் 2) மற்றும் மார்ச் 3 தேதி விடுமுறை நாட்கள் என்பதால் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக பேருந்து நிலையத்தில் கூட்டம் அலைமோதுகிறது. எனவே சென்னை பேருந்து நிலையத்தில் இருந்து மற்ற ஊர்களுக்கு வழக்கமாக செல்லும் அரசு பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பஸ்களை இயக்க அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி,
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து மதுரை, கோயம்புத்தூர், சேலம், திருச்சி, கும்பகோணம், திருநெல்வேலி, திருவண்ணாமலை, நாகர்கோவில், கன்னியாகுமரி, ஈரோடு, திருப்பூர், தூத்துக்குடி ஆகிய ஊர்களுக்கு இன்று கூடுதலாக 365 பஸ்களும், அதே போல் நாளை (சனிக்கிழமை) 425 பஸ்களும் இயக்கப்படும்.
சென்னை கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் இருந்து புறப்படும் ஓசூர், பெங்களூரு, நாகை, வேளாங்கண்ணி ஆகிய இடங்களுக்கு இன்று 70 பஸ்களும், அதே போல் நாளைக்கும் 70 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் பெங்களூரு, கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு ஆகிய இடங்களில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு 200 சிறப்பு பஸ்கள், அதன்படி இன்று 435 சிறப்பு பஸ்களும், நாளை 495 பஸ்களும் இயக்கப்பட இருக்கிறது. எனவே மொத்தம் 1130 பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.