தமிழகத்தில் 22 மாவட்டங்களில் மழை வாய்ப்பு: தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதில் இருந்து ஓரிரு பகுதிகளில் பலத்த கனமழை பெய்து வருகிறது. இப்படி இருக்கையில் இன்னும் சில நாட்களில் வடகிழக்குப் பருவமழை ஆரம்பமாக இருக்கிறது.
தமிழகத்தில் 22 மாவட்டங்களில் மழை வாய்ப்பு
இதனால் தமிழகத்தின் சில முக்கிய மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்க போகிறது. எனவே அதற்கான முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை அரசு செய்து வருகிறது. இந்நிலையில் சென்னை வானிலை மையம் அடுத்த மூன்று மணி நேரத்தில் கனமழை பெய்ய இருக்கும் மாவட்டங்கள் குறித்து முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளது.
மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் வெற்றி – 5909 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக தோல்வி!
அதன்படி, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சி, விழுப்புரம், கடலூர், புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தூத்துக்குடி, நெல்லை, தஞ்சாவூர், திருவள்ளூர், சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், நாமக்கல், நீலகிரி, கோவை, கன்னியாகுமரி உள்ளிட்ட 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
விஜய்யின் TVK கட்சியில் சேர்ந்த Mr.கிளீன்
ஹரியானா சட்டப்பேரவை தேர்தல் 2024
விமான சாகச நிகழ்ச்சி விவகாரம் 2024 – மவுனம் கலைத்த தமிழக முதல்வர்
மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ் – பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு!