
அடுத்த ஆறு நாட்களுக்கு அனைத்து சமூக வலைத்தளங்களுக்கும் தடை: பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாண முதல்வர் மர்யம் நவாஸ் தலைமையிலான அரசு நேற்று இரவு ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, ” இன்று முதல் அடுத்த ஆறு நாட்களுக்கு அனைத்து சமூக வலைதள சேவையும் தடை செய்யப்படும் என அறிவித்துள்ளது.
கடந்த சில நாட்களாக சோசியல் மீடியா மூலம் சில அவதூறுகள் பரவி வருகிறது. எனவே இது மாதிரியான வன்முறையை தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக மாகாண அரசு தெரிவித்துள்ளது. மேலும் இந்த மாகாணத்தில் சுமார் 120 மில்லியன் மக்கள் வகித்து வருகின்றனர்.
அடுத்த ஆறு நாட்களுக்கு அனைத்து சமூக வலைத்தளங்களுக்கும் தடை

ஏற்கனவே இங்கு முகநூல் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது யூடியூப், எக்ஸ், வாட்ஸ்அப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், டிக் டாக் உள்ளிட்ட தளங்களை தடை செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி அந்நாட்டின் பொது தேர்தலின் போது, தேர்தல் முடிவுகள் சீர்குலைக்க முயன்ற குற்றச்சாட்டில் இந்த தடை விதிக்கப்பட்டது.
Also Read: நீட் முதுநிலை தேர்வு தேதி வெளியீடு – தேசிய தேர்வு வாரியம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!
இது தொடர்பான பரிந்துரையை ஷெபாஸ் ஷெரீப் அரசு, மத்திய அரசிடம் முன்வைத்துள்ளது. அதுமட்டுமின்றி அந்த நாட்டின் துணை பிரதமர் இஷக் தார், சமூக வலைதளங்களுக்கு நாட்டில் நிரந்தர தடை வேண்டுமென தெரிவித்துள்ளார்.
சென்னை செம்மொழி பூங்காவில் உணவுத் திருவிழா
பாம்பன் பேருந்து நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்
என்னது பலூனுக்குள்ள தியேட்டரா? – தமிழகத்தில் எங்கு உள்ளது தெரியுமா?