கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் சில முக்கிய பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயில் வழக்கத்தை விட அதிகமாக இருந்து வரும் நிலையில் மக்கள் மிகுந்த சிரமத்தை எதிர்நோக்கி வருகின்றனர். எப்போது மழை பெய்யும் சூட்டை தணிக்க வேண்டும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் சென்னை வானிலை மையம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது, தமிழகத்தில் உள்ள கிட்டத்தட்ட 8 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் கனமழை வெளுத்து வாங்கும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!

அதன்படி தமிழகத்தின் முக்கிய பகுதிகளான நெல்லை, கன்னியாகுமரி, திருவாரூர், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, ராமநாதபுரம் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் தான் அடுத்த மூன்று மணி நேரத்தில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளனர். இந்த அறிவிப்பை கேட்ட மாவட்டங்களில் வாழும் மக்கள் சந்தோஷத்தில் மிதந்து வருகின்றனர். மற்ற மாவட்டங்களில் வெயில் வெளுத்து வாங்கும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.