நெய்வேலி நகரியத்தில் செயல்பட்டு வரும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயின்று வரும் மாணவர்களுக்கு இலவச பேருந்து சேவை தொடங்கி வைத்தது என்எல்சி நிறுவனம்.
மாணவர்களுக்கு இலவச பேருந்து சேவை
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
நெய்வேலி என்எல்சி நிறுவனம் :
கடலூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனம் சார்பில் நமது ஊர், நமது மக்கள், நமது சேவைகள் என்ற திட்டத்தின் அடிப்படையில்,
பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு இலவச பேருந்து சேவை திட்டத்தைத் துவக்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
மேலும் இந்நிகழ்ச்சிக்கு என்எல்சி இந்தியா நிறுவன தலைவர் மற்றும் மேலாண் இயக்குனர் பிரசன்ன குமார் மோட்டுப்பள்ளி தலைமையேற்றுக் கொடியசைத்து இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார்.
இலவச பேருந்து சேவை திட்டம் :
இதனை தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி நெய்வேலியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில்,
என்எல்சி நிறுவனம் சார்பில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு இலவச பேருந்து சேவை திட்டம் வெகு விரைவில் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
அந்த வகையில் இந்த அறிவிப்பை உடனடியாக நடைமுறைக்குக் கொண்டு வரும் வகையில் ஆகஸ்ட் 20ம் தேதி முதல் நெய்வேலி பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு இலவச பேருந்து சேவை திட்டம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.
வேலையில்லா பட்டதாரிகளே குட் நியூஸ் – மதுரையில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்!!
மாணவ, மாணவிகள் பயன்பெறும் சிறப்பு திட்டம் :
இதனையடுத்து நெய்வேலி நகரியத்தில் 38 பள்ளிகள் மற்றும் ஒரு கல்லூரியில் என சுமார் 30 ஆயிரம் மாணவ மாணவிகள் கல்வி கற்று வருகிறார்கள்.
அத்துடன் பல்வேறு சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து நெய்வேலி நகரியத்தில் உள்ள பள்ளிகளில் கல்வி கற்கும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயன் பெறும் வகையில் இந்த இலவச பேருந்து சேவை திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் இந்த சிறப்பு இலவச பேருந்து திட்டத்தின் மூலம் நெய்வேலி பள்ளிகளில் படிக்கும் அனைத்து மாணவர்களும் நெய்வேலி நுழைவு வாயில் மற்றும் மந்தாரக்குப்பம் ஆகிய இடங்களில் இருந்து இலவசமாகப் பயணிக்கும் வகையில் பேருந்துகள் சேவை வழங்கப்படுகிறது.